TCV 93

அம்பு எய்த வில்லிராமன்

844 சுரும்பரங்குதண்டுழாய் துதைந்தலர்ந்தபாதமே *
விரும்பிநின்றிறைஞ்சுவேற்கு இரங்குஅரங்கவாணனே! *
கரும்பிருந்தகட்டியே! கடல்கிடந்தகண்ணனே! *
இரும்பரங்கவெஞ்சரந்துரந்த வில்லிராமனே!
844 curumpu araṅku taṇ tuzhāy * tutaintu alarnta pātame *
virumpi niṉṟu iṟaiñcuveṟku * iraṅku araṅkavāṇaṉe **
karumpu irunta kaṭṭiye * kaṭal kiṭanta kaṇṇaṉe *
irumpu araṅka vĕñcaram turanta * vil irāmaṉe (93)

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

844. You, the god of Srirangam, adorned with a cool thulasi garland that swarms with bees, give your grace to those who love and worship your feet. You, as sweet as a bundle of sugarcane, are Kannan resting on the ocean. As Rāma, you shot powerful arrows with your bow and destroyed the iron forts of Lankā.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கரும்பு இருந்த கரும்பைபோல் இனிக்கும்; கட்டியே! சக்கரைக் கட்டியே!; கடல் கிடந்த பாற்கடலிலே சயனித்திருக்கும்; கண்ணனே கண்ணனே!; இரும்பு இரும்புபோல் வலிய; அரங்க அரக்கர்கள் சரீரம் அழுந்தும்படி; வெஞ்சரம் துரந்த அம்புகளை எய்த; வில் இராமனே! வில்லை உடைய இராமனே!; அரங்க வாணனே ஸ்ரீரங்கத்தில் இருப்பவனே!; சுரும்பு அரங்கு வண்டுகள் படிந்த; தண் துழாய் குளிர்ந்த திருத்துழாயானது; துதைந்து அலர்ந்த தொட்டவுடன் மலரும்; பாதமே உன் பாதங்களையே; விரும்பி நின்று ஆசைப்பட்டு என்றும்; இரைஞ்சுவேற்கு துதிக்கும் எனக்கு; இரங்கு கிருபை பண்ணி அருள வேண்டும்