TCV 87

நின் பற்றின்றி மற்றோர் பற்றில்லை

838 நெற்றிபெற்றகண்ணன் விண்ணினாதனோடுபோதின்மேல் *
நற்றவத்துநாதனோடு மற்றுமுள்ளவானவர் *
கற்றபெற்றியால்வணங்குபாத! நாத! வேத! * நின்
பற்றலாலொர்பற்று மற்றதுற்றிலேனுரைக்கிலே.
838 nĕṟṟi pĕṟṟa kaṇṇaṉ * viṇṇiṉ nātaṉoṭu potiṉmel *
naṟṟavattu nātaṉoṭu * maṟṟum ul̤l̤a vāṉavar **
kaṟṟa pĕṟṟiyāl vaṇaṅku * pāta nāta veta * niṉ
paṟṟu alāl ŏr paṟṟu * maṟṟatu uṟṟileṉ uraikkile (87)

Ragam

Surutti / சுருட்டி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

838. You are the Vedās. Shivā with an eye in his forehead, the wise Nānmuhan staying on the lotus and all other gods together worship your feet with love. I will not speak of any other love except the love that I have for you.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெற்றிபெற்ற கண்ணன் நெற்றிக் கண்ணுடைய சிவன்; விண்ணின் தேவலோகத்து; நாதனோடு நாயகனான இந்திரன்; போதின்மேல் தாமரைப்பூவிலே பிறந்த; நற்றவத்து தவச்சீலனான; நாதனோடு நான்முகக் கடவுள்; மற்றும் உள்ள மற்றும் உள்ள; வானவர் தேவதைகளும்; கற்ற பெற்றியால் அவரவர் கற்ற வழியில்; வணங்கு வணங்குகின்ற; பாத! திருவடிகளை உடையவனே!; நாத! நாதனே!; வேத! வேதப்பொருளே!; உரைக்கிலே சொல்லப்போனால்; நின் உன்னை; பற்று அலால் பற்றியிருப்பது தவிர; ஓர் பற்று மற்றது வேறொர் பற்றை; உற்றிலேன் மனதாலும் நினைக்கவில்லை