TCV 86

பாம்பின்மீது நடம்பயின்ற நாதன்

837 சாடுசாடுபாதனே! சலங்கலந்தபொய்கைவாய் *
ஆடராவின்வன்பிடர் நடம்பயின்றநாதனே! *
கோடுநீடுகைய! செய்யபாதநாளுமுள்ளினால் *
வீடனாகமெய்செயாத வண்ணமென்கொல்? கண்ணனே!
837 cāṭu cāṭu pātaṉe * calam kalanta pŏykaivāy *
āṭu arāviṉ vaṉpiṭar * naṭam payiṉṟa nātaṉe **
koṭu nīṭu kaiya cĕyya * pātam nāl̤um ul̤l̤iṉāl *
vīṭaṉāka mĕy cĕyāta * vaṇṇam ĕṉkŏl? kaṇṇaṉe (86)

Ragam

Surutti / சுருட்டி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

837. Dance, dance with your feet. You danced on the heads of the snake Kālingan stirring the water in the pond, O you who carry a conch in your hand. I worship your beautiful feet every day and think of you always. Why have you not granted me Mokshā yet, O Kanna.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சாடு சாடு சகடாஸுரனை அழித்த; பாதனே! பாதங்களை உடையவனே!; சலம் கலந்த விஷம் கலந்த; பொய்கைவாய் மடுவிலே; ஆடு அராவின் காளியன் என்னும் பாம்பின்; வன்பிடர் பிடரியில்; நடம் பயின்ற நாதனே! நடனமாடிய நாதனே!; கோடு நீடு பாஞ்சஜன்யத்தை; கைய கையிலுடையவனே!; கண்ணனே! கண்ணனே!; செய்ய செந்தாமரைபோன்ற சிவந்த; பாதம் பாதங்களை; நாளும் நாள்தோறும்; உள்ளினால் தியானித்தும்; வீடனாக மெய் உண்மையில்; செயாத வண்ணம் முக்தி அளிக்காதது; என்கொல்? ஏனோ?