TCV 75

செங்கண்மாலைக் காணவல்லவர் யாவர்?

826 ஒன்றிநின்றுநற்றவம்செய்து ஊழியூழிதோறெலாம் *
நின்றுநின்றவன்குணங்கள்உள்ளியுள்ளம்தூயராய் *
சென்றுசென்றுதேவதேவர் உம்பரும்பரும்பராய் *
அன்றி, எங்கள்செங்கண்மாலை யாவர்காணவல்லரே?
826 ŏṉṟi niṉṟu naṟṟavam cĕytu * ūzhi ūzhitoṟu ĕlām *
niṉṟu niṉṟu avaṉ kuṇaṅkal̤ * ul̤l̤i ul̤l̤am tūyarāy **
cĕṉṟu cĕṉṟu tevatevar * umpar umpar umparāy *
aṉṟi ĕṅkal̤ cĕṅkaṇ mālai * yāvar kāṇa vallare? (75)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

826. Only those who do good tapas thinking only of the lord and who think constantly of the nature of Thirumāl will go to the spiritual world and stay with the other gods forever. Except for those devotees no one can see the lovely-eyed Thirumāl.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஒன்றி நின்று மனதை ஈடுபடுத்தி; நல் தவம் பலன் கருதாமல் நல்ல தவம்; செய்து செய்து; ஊழி ஊழிதோறு எலாம் பல கல்பகாலங்கள்; நின்று நின்று படிப்படியாக; அவன் குணங்கள் அவன் குணங்களை; உள்ளி அனுஸந்தித்து; உள்ளம் சுத்தமான; தூயராய் நெஞ்சுடையவராய்; சென்று கிரமமாக த்யான நிலையை; சென்று அடைந்து; உம்பர் பரபக்தி; உம்பர் பரஜ்ஞாநம்; உம்பராய் பரம பக்தி நிலைகளை அடைந்தாலன்றி; தேவதேவர் அன்றி தேவதேவராயிருந்தாலும்; எங்கள் செங்கண் எங்கள் செந்தாமரை; மாலை கண்ணனை; யாவர் காணவல்லரே? யார் காணக்கூடியவர்கள்?