TCV 74

அரங்கனை வாழ்த்தினால் தீவினைகள் நீங்கும்

825 அறிந்தறிந்துவாமனன் அடியிணைவணங்கினால் *
செறிந்தெழுந்தஞானமோடு செல்வமும்சிறந்திடும் *
மறிந்தெழுந்ததெண்டிரையுள் மன்னுமாலைவாழ்த்தினால் *
பறிந்தெழுந்துதீவினைகள் பற்றறுதல்பான்மையே.
825 aṟintu aṟintu vāmaṉaṉ * aṭiyiṇai vaṇaṅkiṉāl *
cĕṟintu ĕzhunta ñāṉamoṭu * cĕlvamum ciṟantiṭum **
maṟintu ĕzhunta tĕṇ tiraiyul̤ * maṉṉu mālai vāzhttiṉāl *
paṟintu ĕzhuntu tīviṉaikal̤ * paṟṟu aṟutal pāṉmaiye (74)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

825. If you really know that your refuge is the feet of him who took the form of Vāmanan and worship him, you will have wealth and wonderful wisdom. If you praise Thirumāl who rests on the ocean with its clear rolling waves, you will not have the results of your bad karmā.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வாமனன் வாமனனாக பெருமானுடைய; அடியிணை திருவடிகளை; அறிந்து உபாயமென்றும் உபேயமென்றும் தெரிந்து; அறிந்து வணங்கினால்; செறிந்து எழுந்த நெருங்கி உண்டான; ஞானமோடு ஆத்மாவைப்பற்றிய ஞானமும்; செல்வமும் பக்தியாகிற செல்வமும்; சிறந்திடும் நிறைந்து வரும்; மறிந்து எழுந்த பரந்து கிளர்ந்த; தெண்திரையுள் தெளிந்த அலைகளையுடைய; மன்னு மாலை பாற்கடலிலே வாழும் திருமாலை; வாழ்த்தினால் துதித்தால்; பறிந்து எழுந்து ஆத்மாவின்; தீவினைகள் கொடுவினைகள் அனைத்தும்; பற்று அறுதல் பற்றோடு அழிந்துபோம்; பான்மையே இது இயற்கையே