TCV 65

நீ தங்குமிடம் என் உள்ளம் தான்

816 நிற்பதும்ஓர்வெற்பகத்து இருப்பும்விண், கிடப்பதும் *
நற்பெருந்திரைக்கடலுள் நானிலாதமுன்னெலாம் *
அற்புதனனந்தசயனன் ஆதிபூதன்மாதவன் *
நிற்பதும்மிருப்பதும் கிடப்பதும்என்நெஞ்சுளே.
816 niṟpatum ŏr vĕṟpakattu * iruppum viṇ kiṭappatum *
naṟpĕrun tiraik kaṭalul̤ * nāṉ ilāta muṉṉĕlām **
aṟputaṉ aṉanta-cayaṉaṉ * ātipūtaṉ mātavaṉ *
niṟpatum iruppatum * kiṭappatum ĕṉ nĕñcul̤e (65)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

816. The ancient god who stands in the Venkatam hills, stays in the spiritual world in the sky and rests on the wide ocean with rolling waves snake bed Adishesha. He, Madhavan, standing, sitting and resting in my heart, is a wonder.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஒர் ஒப்பற்ற; வெற்பகத்து திருவேங்கடமலையில்; நிற்பதும் நிற்பதும்; இருப்பும் பரமபதமாகிற; விண் ஆகாசத்தில் இருப்பதும்; நற்பெரும் அலைகளையுடைய; திரைக்கடலுள் திருப்பாற்கடலிலே; கிடப்பதும் சயனித்திருப்பதும்; நான் எனக்கு பக்தியென்னும் உணர்வு; இலாத முன்னெலாம் இல்லாத போது; அற்புதன் ஞானம் வந்த பின் ஆச்சர்யமானவனும்; அனந்தசயனன் அனந்தசயனனுமான; ஆதிபூதன் மாதவன் ஆதிபூதன் நாராயணன்; நிற்பதும் நிற்பதும்; இருப்பதும் இருப்பதும்; கிடப்பதும் கிடப்பதும் ஆகிய மூன்று நிலையிலும்; என் நெஞ்சுளே என் மனதினுள்ளே இருக்கிறான்