59 -பாட்டு -அவதாரிகை –
பண்டு ஆஸ்ரித விரோதிகளைப் போக்கின மிடுக்கனாய் வைத்து அழகாலும் சீலத்தாலும் ஆஸ்ரிதரை எழுதிக் கொள்ளுகைகாக அவதரித்த கிருஷ்ணன் – பிற்பாடருடைய இழவு தீர சர்வ பிரகாரத்தாலும் புஷ்கலமான திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளுகிறபடியை அனுபவிக்கிறார் –
சாலி வேலி தண் வயல் தட கிடங்கு பூம் பொழில் கோல மாட நீடு தண் குடந்தை மேய கோவலா