TCV 57

திருக்குடந்தை ஆராவமுது

808 சங்குதங்குமுன்கைநங்கை கொங்கைதங்கலுற்றவன் *
அங்கமங்கவன்றுசென்று அடர்த்தெறிந்தவாழியான் *
கொங்குதங்குவார்குழல் மடந்தைமார்குடைந்தநீர் *
பொங்குதண்குடந்தையுள் கிடந்தபுண்டரீகனே. 57
808 சங்கு தங்கு முன் கை நங்கை * கொங்கை தங்கல் உற்றவன் *
அங்கம் மங்க அன்று சென்று * அடர்த்து எறிந்த ஆழியான் **
கொங்கு தங்கு வார் குழல் * மடந்தைமார் குடைந்த நீர் *
பொங்கு தண் குடந்தையுள் * கிடந்த புண்டரீகனே (57)
808 caṅku taṅku muṉ kai naṅkai * kŏṅkai taṅkal uṟṟavaṉ *
aṅkam maṅka aṉṟu cĕṉṟu * aṭarttu ĕṟinta āzhiyāṉ **
kŏṅku taṅku vār kuzhal * maṭantaimār kuṭainta nīr *
pŏṅku taṇ kuṭantaiyul̤ * kiṭanta puṇṭarīkaṉe (57)

Ragam

Tōdi / தோடி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

808. He who carries a conch, embraces beautiful Lakshmi on his chest, and kills his enemies with his discus is Pundarigan of Kudandai where young women whose long beautiful hair is decorated with kongu flowers play in the cool abundant water.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
சங்கு தங்கு சங்கு வளைகள்; முன் கை அணிந்த; நங்கை ஸீதா பிராட்டியின்; கொங்கை மார்பகத்தில்; தங்கல் உற்றவன் காதல்கொண்ட ராவணன்; அங்கம் மங்க சரீரம் அழியும்படி; அன்று அன்று இலங்கையில்; அடர்த்து அவன் இருந்த இடம் சென்று; எறிந்த அவன் தலைகளை அறுத்தெறிந்த; ஆழியான் சக்கரத்தையுடைய பெருமான்; கொங்கு தங்கு வாசனையுடைய; வார் குழல் நீண்ட கூந்தலையுடைய; மடந்தைமார் பெண்கள்; குடைந்த நீர் குடைந்து நீராடும்; பொங்கு தண் சிறப்புடைய குளிர்ந்த; குடந்தையுள் திருக்குடந்தையில்; கிடந்த இருக்கும்; புண்டரீகனே! புண்டரீகனே!