TCV 56

திருக்குடந்தைக் கிடந்த திருமால்

807 இலங்கைமன்னனைந்தொடைந்து பைந்தலைநிலத்துக *
கலங்கவன்றுசென்றுகொன்று வென்றிகொண்டவீரனே! *
விலங்குநூலர்வேதநாவர் நீதியானகேள்வியார் *
வலங்கொளக்குடந்தையுள் கிடந்தமாலுமல்லையே?
807 ilaṅkai maṉṉaṉ aintŏṭu aintu * paintalai nilattu uka *
kalaṅka aṉṟu cĕṉṟu kŏṉṟu * vĕṉṟi kŏṇṭa vīraṉe **
vilaṅku nūlar veta nāvar * nītiyāṉa kel̤viyār *
valaṅ kŏl̤ak kuṭantaiyul̤ * kiṭanta mālum allaiye? (56)

Ragam

Tōdi / தோடி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

807. You, the heroic god, went to Lankā and conquered and killed the king Rāvana, making his ten garlanded heads fall to the ground. You are Thirumāl of Kudandai where wise, faultless Vediyars with sacred threads recite the Vedās and worship you.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்று முற்காலத்தில்; இலங்கைமன்னன் இராவணனுடைய; ஐந்தொடு ஐந்து பைந்தலை பத்து தலைகள்; நிலத்து உக பூமியிலே விழவும்; கலங்க ராவணன் கலங்கவும்; சென்று அவன் இருப்பிடம் சென்று; கொன்று அவனை அழித்தும்; வென்றி கொண்ட வீரனே வெற்றி பெற்ற வீரனே; விலங்கு நூலர் சரீரத்திலே பூணூல் உடையவர்களும்; வேத நாவர் வேதங்களை ஓதுபவர்களும்; நீதியான நியாயமான உபதேசம் பெற்ற; கேள்வியார் வைதிகர்கள்; வலங் கொள வலம் வரும் சிறப்புடன்; குடந்தையுள் கிடந்த திருக்குடந்தையிலே இருக்கும்; மாலும் அல்லையே? ஸர்வேச்வரனும் நீயன்றோ?