TCV 52

பற்றற்றவர்கள் சூழ்ந்து வாழும் ஊர் அரங்கம்

803 பொற்றையுற்றமுற்றல்யானை போரெதிர்ந்துவந்ததை *
பற்றியுற்றுமற்றதன் மருப்பொசித்தபாகனூர் *
சிற்றெயிற்றுமுற்றல்மூங்கில் மூன்றுதண்டரொன்றினர் *
அற்றபற்றர்சுற்றிவாழும் அந்தணீரரங்கமே.
803 pŏṟṟai uṟṟa muṟṟal yāṉai * por ĕtirntu vantatai *
paṟṟi uṟṟu maṟṟu ataṉ * maruppu ŏcitta pākaṉ ūr **
ciṟṟĕyiṟṟu muṟṟal mūṅkil * mūṉṟu taṇṭar ŏṉṟiṉar *
aṟṟa paṟṟar cuṟṟi vāzhum * antaṇ nīr araṅkame (52)

Ragam

Tōdi / தோடி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

803. The Thiruppadi of the lord who fought the elephant Kuvalayabeedam who came to attack him angrily and broke its tusks is Srirangam surrounded by clear water where the Vediyars are without desire and walk holding bamboo sticks that have small pearls.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பொற்றை உற்ற கற்பாறையிலே நிற்கும்; முற்றல் வலிமைமிக்க; யானை குவலயாபீட யானை; போர் யுத்தத்தில்; எதிர்ந்து வந்ததை எதிர்த்து வந்த; உற்று அந்த யானையை; பற்றி சென்று பிடித்து; மற்று அதன் அதனுடைய; மருப்பு ஒசித்த கொம்பை முறித்த; பாகன் ஊர் கண்ணன் வாழும் ஊர்; சிற்று சிறிய பற்கள் போன்ற; எயிற்று கணுக்களையுடைய; முற்றல் மூங்கில் திடமான மூங்கிலாலான; மூன்று தண்டர் த்ரிதண்டத்தை; ஒன்றினர் உடைய; அற்ற பற்றர் பற்றற்ற ஸந்யாசிகள்; சுற்றி வாழும் வாழும் ஊர்; அந்தண் அழகிய குளிர்ந்த; நீர் நீர் நிறைந்த; அரங்கமே அரங்கமாநகர் கோயிலேயாம்