TCV 51

பிரமன் பணிந்த கோயில் அரங்கம்

802 சரங்களைத்துரந்து வில்வளைத்து, இலங்கைமன்னவன் *
சிரங்கள்பத்தறுத்துதிர்த்த செல்வர்மன்னுபொன்னிடம் *
பரந்துபொன்நிரந்துநுந்தி வந்தலைக்கும்வார்புனல் *
அரங்கமென்பர் நான்முகத்தயன்பணிந்தகோயிலே.
802 caraṅkal̤ait turantu * vil val̤aittu ilaṅkai maṉṉavaṉ *
ciraṅkal̤ pattu aṟuttu utirtta * cĕlvar maṉṉu pŏṉ-iṭam **
parantu pŏṉ nirantu nunti * vantu alaikkum vār puṉal *
araṅkam ĕṉpar nāṉ mukattu * ayaṉ paṇinta koyile (51)

Ragam

Tōdi / தோடி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

802. The Thiruppadi of the lord who bent his bow, shot his arrows and cut down the ten heads of Rāvana the king of Lankā is Srirangam where the waves of the Kaveri river roll everywhere bringing gold to the shores and where Nanmuhan worshipped him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வில் சார்ங்கமென்னும் வில்லை; வளைத்து வளைத்து; சரங்களைத் துரந்து பாணங்களை விட்டு; இலங்கை இலங்கைஅரசனான; மன்னவன் ராவணனுடைய; சிரங்கள் பத்து பத்துத்தலைகளையும்; அறுத்து உதிர்த்த வெட்டி வீழ்த்திய; செல்வர் மன்னு வீரனான ராமன் வாழுமிடம்; பரந்து எங்கும் பரந்து வந்து; பொன் நிரந்து பொன்னை; நுந்தி வந்து தள்ளிக்கொண்டு வரும்; பொன் இடம் பொன் போன்ற சிறந்த ஊர்; அரங்கம் அரங்கமாநகர்; என்பர் என்பர் அதுவே; அலைக்கும் அலைகளோடு கூடின; வார் புனல் ஜலத்தை உடைய; நான்முகத்து அயன் நான்முக பிரம்மா; பணிந்த கோயிலே வணங்கும் கோயிலாகும்