TCV 43

நீயே ஆதிதேவன்

794 வெஞ்சினத்தவேழவெண்மருப்பொசித்து உருத்தமா *
கஞ்சனைக்கடிந்து மண்ணளந்துகொண்ட காலனே! *
வஞ்சனத்துவந்தபேய்ச்சியாவி பாலுள்வாங்கினாய் *
அஞ்சனத்தவண்ணானாய ஆதிதேவனல்லையே?
794 வெஞ்சினத்த வேழ வெண் * மருப்பு ஒசித்து உருத்த மா *
கஞ்சனைக் கடிந்து * மண் அளந்து கொண்ட காலனே **
வஞ்சனத்து வந்த பேய்ச்சி * ஆவி பாலுள் வாங்கினாய் *
அஞ்சனத்த வண்ணன் ஆய * ஆதிதேவன் அல்லையே? (43)
794 vĕñciṉatta vezha vĕṇ * maruppu ŏcittu urutta mā *
kañcaṉaik kaṭintu * maṇ al̤antu kŏṇṭa kālaṉe **
vañcaṉattu vanta peycci * āvi pālul̤ vāṅkiṉāy *
añcaṉatta vaṇṇaṉ āya * ātitevaṉ allaiye? (43)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

794. You, the best of everything, broke the white tusks of an enraged elephant. You destroyed Kamsan when he was angry with you. You are the Māyan who measured the world and drank the milk of the deceiving devil Putanā and killed her, you, the ancient god colored as dark as kohl.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
வெஞ்சினத்த கொடிய கோபத்தையுடைய; வேழ குவலயாபீட யானையின்; வெண் மருப்பு ஒசித்து வெண்மையான தந்தத்தை ஒடித்து; உருத்தமா கோபித்தவனாய்; கஞ்சனைக் கடிந்து கம்ஸனை அழித்தவனே!; வஞ்சனத்து வஞ்சனை எண்ணத்தோடு வந்த; வந்த பேய்ச்சி பூதனையின்; ஆவி பாலுள் உயிரை பாலிலே; வாங்கினாய்! அபஹரித்தவனே!; மண் அளந்து கொண்ட பூமியை அளந்து கொண்ட; காலனே! திருவடிகளையுடையவனே!; அஞ்சனத்த வண்ணன் ஆய கருத்த நிறமுடையவனாய்; ஆதிதேவன் ஆதிதேவனான மூலமூர்த்தி; அல்லையே அன்றோ நீ!