TCV 32

மாவலியினிடம் இரக்கமே காட்டவில்லையே!

783 குரக்கினப்ப டைகொடுகுரைகடலின் மீதுபோய்
அரக்கரங்க ரங்கவெஞ்சரம்துரந்த ஆதிநீ *
இரக்கமண்கொடுத்தவற்கு இருக்கமொன்று மின்றியே *
பரக்கவைத்த ளந்துகொண்டபற்பபாத னல்லையே?
783 kurakkiṉap paṭai kŏṭu * kurai kaṭaliṉ mītu poy
arakkar aṅku araṅka * vĕñcaram turanta āti nī **
irakka maṇ kŏṭuttavaṟku * irakkam ŏṉṟum iṉṟiye *
parakka vaittu al̤antu kŏṇṭa * paṟpapātaṉ allaiye? (32)

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

783. Your feet are beautiful as lotuses. You, the ancient one, crossed the ocean with the help of a monkey army, fought the Raksasas, shot your cruel arrows and destroyed them. You begged Mahābali to give you land and took all his land, measuring the earth and the sky with your feet so they all belonged to you.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குரக்கின படை வாநர சேனையை; கொடு துணைகொண்டு; குரை கடலின் கோஷிக்கின்ற கடலில்; மீது போய் அணைகட்டிப் போய்; அரக்கர் இலங்கையிலுள்ள ராக்ஷஸர்கள்; அங்கு அரங்க அங்கு அழியும்படி; வெஞ்சரம் தீக்ஷ்ணமான அம்புகளை; துரந்த ஆதி நீ அவர்கள் மேல் பிரயோகித்த நீ; இரக்க மண் வாமநனாய்ச் சென்று யாசிக்க; கொடுத்தவற்கு தானம் கொடுத்த மஹாபலிக்கு; இருக்க இருப்பதற்கு; ஒன்றும் இன்றியே ஒரு சாண் நிலமும் இல்லாதபடி; பரக்க திருவடியை மிகவும் விஸ்தாரமாக; வைத்து வைத்து; அளந்துகொண்ட மூவுலகங்களையும் அளந்து கொண்ட; பற்பபாதன் தாமரைபோன்ற திருவடிகளையுடைய; அல்லையே பெருமானும் நீயேதானோ!