TCV 16

நின் பெருமை மலைகளினும் உயர்ந்தது

767 தலைக்கணத்துகள்குழம்புசாதி சோதிதோற்றமாய் *
நிலைக்கணங்கள்காணவந்து நிற்றியேலும் நீடிரும் *
கலைக்கணங்கள்சொற்பொருள் கருத்தினால்நினைக்கொணா *
மலைக்கணங்கள்போலுணர்த்தும்மாட்சி நின்றன்மாட்சியே.
767 தலைக் கணம் துகள் குழம்பு * சாதி சோதி தோற்றமாய் *
நிலைக் கணங்கள் காண வந்து * நிற்றியேலும் நீடு இரும் **
கலைக் கணங்கள் சொற் பொருள் * கருத்தினால் நினைக்கொணா *
மலைக் கணங்கள் போல் உணர்த்தும் * மாட்சி நின்தன் மாட்சியே (16)
767 talaik kaṇam tukal̤ kuzhampu * cāti coti toṟṟamāy *
nilaik kaṇaṅkal̤ kāṇa vantu * niṟṟiyelum nīṭu irum **
kalaik kaṇaṅkal̤ cŏṟ pŏrul̤ * karuttiṉāl niṉaikkŏṇā *
malaik kaṇaṅkal̤ pol uṇarttum * māṭci niṉtaṉ māṭciye (16)

Ragam

Aparūpa / அபரூப

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

767. You are the souls of the gods, plants, people who do good and bad karmā and animals. Even though people do not know who you are, they hear of you from the Vedās and the scriptures of the sages and they know you in their hearts. Your greatness is like that of high mountains.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
தலைக் கணம் உயர்ந்த தேவர்கள்; துகள் ஸ்தாவரங்கள்; குழம்பு சாதி மனிதர்கள் ஆகியவற்றுள்; சோதி தோற்றமாய் தேஜசுடன் அவதரித்து; நிலைக் கணங்கள் ஸ்தாவரங்களும்; காண அனுபவித்திட; வந்து நிற்றி யேலும் வந்து நிற்கிறாயாகிலும்; நீடு இரும் நித்தியமாகப் பரந்துள்ள; கலைக் கணங்கள் வேதங்களின்; சொற்பொருள் சொல்பொருளினாலும்; கருத்தினால் கருத்தினாலும்; நினைக்கொணா நினைக்கவும் முடியாத அளவு; மலைக்கணங்கள் போல் மலைகள் போன்ற பெரியதான; உணர்த்தும் மாட்சி அறிவிக்கப்படும் அழகு; நின்தன் மாட்சியே உனக்கே உரிய அழகாகும்