TCV 12

நின் இருப்பிடத்தை நிணைக்கவல்லார் யார்?

763 உலகுதன்னைநீபடைத்தி உள்ளொடுக்கிவைத்தி * மீண்டு
உலகுதன்னுளேபிறத்தி ஒரிடத்தையல்லையால் *
உலகுநின்னொடொன்றிநிற்க வேறுநிற்றியாதலால் *
உலகில்நின்னையுள்ளசூழல் யாவர்உள்ளவல்லரே?
763 ulaku taṉṉai nī paṭaitti * ul̤ ŏṭukki vaitti mīṇṭu *
ulaku taṉṉul̤e piṟatti * oriṭattai allaiyāl **
ulaku niṉṉŏṭu ŏṉṟi niṟka * veṟu niṟṟi ātalāl *
ulakil niṉṉai ul̤l̤a cūzhal * yāvar ul̤l̤a vallare? (12)

Ragam

Aparūpa / அபரூப

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

763. You created the world, you swallowed, spat it out and again you created it again. The world is within you and you are separate from it also. You do not remain in one place. Who knows how you are in this world?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உலகுதன்னை நீ படைத்தி உலகை நீ படைத்தாய்; உள் ஒடுக்கி உன்னுள்ளே ஒடுக்கி; வைத்தி மீண்டு வைத்து மீண்டும்; உலகு தன்னுளே பிறத்தி உலகை உண்டாக்கி; ஓரிடத்தை ஓரிடத்தில் நிலையாக; அல்லையால் நிற்காமல்; உலகு நின்னொடு உலகமே உன்னோடு; ஒன்றி நிற்க ஒடுங்கி நிற்க; வேறு நிற்றி நீ வேறாகவும் நிற்கிறாய்; ஆதலால் எந்த விதமும் அளவிட முடியாத; சூழல் உள்ள ஆச்சர்யமான சூழலையுடைய; நின்னை உன்னை; உலகில் உலகில்; யாவர் உள்ள வல்லரே? அறியவல்லவர் யாரோ?