TCV 116

அரக்கரைக் கொன்ற வீரனார் அருளே தேவை

867 மாறுசெய்தவாளரக்கன் நாளுலப்ப * அன்றிலங்கை
நீறுசெய்துசென்றுகொன்று வென்றிகொண்டவீரனார் *
வேறுசெய்துதம்முளென்னை வைத்திடாமையால் * நமன்
கூறுசெய்துகொண்டிறந்த குற்றமெண்ணவல்லனே?
867 māṟu cĕyta vāl̤-arakkaṉ * nāl̤ ulappa aṉṟu ilaṅkai *
nīṟu cĕytu cĕṉṟu kŏṉṟu * vĕṉṟi kŏṇṭa vīraṉār **
veṟu cĕytu tammul̤ ĕṉṉai * vaittiṭāmaiyāl * namaṉ
kūṟucĕytu kŏṇṭu iṟanta * kuṟṟam ĕṇṇa vallaṉe? (116)

Ragam

Mohana / மோஹன

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

867. Rāma the heroic one, went to Lankā, fought with Rāvana whose sword was mighty, burned it, killed Rāvana and conquered Lankā. My god does not think that I am like his enemies. Yama will not think of the sins I have done and afflict me because I am a devotee of the god.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாறு செய்த எதிரிட்டுக்கொண்டு; வாள் வாளுடன் வந்த; அரக்கன் ராவணனுடைய; நாள் உலுப்ப வாழ்நாள் முடியும்படியாக; அன்று இலங்கை இலங்கையை; நீறு செய்து சாம்பலாக்கி; சென்று கொன்று அங்கு அவனைக் கொன்று; வென்றி கொண்ட வெற்றி பெற்ற; வீரனார் வீரனான ஸ்ரீராமனே!; தம்முள் என்னை என்னை தம் திரு உள்ளத்தில்; வேறு செய்து பொருத்தி; வைத்திடாமையால் வைத்துக்கொண்டதால்; நமன் யமன்; கூறு செய்து கொண்டு என்னை பிரித்து; இறந்த குற்றம் என் பாவங்களை; எண்ண நெஞ்சாலும்; வல்லனே நினைக்க முடியுமோ?