STM 5

தலைவனைத் தலைவி கண்டு மெலிந்தமை

2677 காரார்குழலெடுத்துக்கட்டி * கதிர்முலையை
வாராரவீக்கி மணிமேகலைதிருத்தி *
ஆராரயில்வேற்கண் அஞ்சனத்தின்நீறணிந்து *
சீரார்செழும்பந்து கொண்டடியாநின்றேன்நான் *
நீரார்கமலம்போல் செங்கண்மாலென்றொருவன் *
பாரோர்களெல்லாம் மகிழப்பறைகறங்க *
சீரார்குடமிரண்டேந்தி *
2677 kār ār kuzhal ĕṭuttuk kaṭṭi * katir mulaiyai
vār āra vīkki maṇi mekalai tirutti *
ār ār ayil vel kaṇ añcaṉattiṉ nīṟu aṇintu *
cīr ār cĕzhum pantu kŏṇṭu aṭiyā niṉṟeṉ nāṉ *
nīr ār kamalam pol cĕṅkaṇ māl ĕṉṟu ŏruvaṉ *
pārorkal̤ ĕllām makizha paṟai kaṟaṅka *
cīr ār kuṭam iraṇṭu enti * -5

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2677. I adorned my dark hair and tied it up, put a band around my beautiful breasts a mekalai around my waist, and put kohl on my sharp spear-like eyes. I was playing ball happily. “Thirumāl with eyes like beautiful lotuses blooming in the water came there carrying a lovely pot 5

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கார் ஆர் குழல் கரிய நிறமுடைய கூந்தலை; எடுத்துக் கட்டி மேலே தூக்கிமுடித்து; கதிர் முலையை மார்பகங்களை; வார் ஆர வீக்கி கச்சால் கட்டி; மணி ரத்னங்களிழைத்த; மேகலை திருத்தி மாலையணிந்து; ஆர் ஆர் அயில் அழகிய; வேல் கண் வேல் போன்ற கண்களில்; அஞ்சனத்தின் நீர் அணிந்து மை இட்டுக்கொண்டு; சீர் ஆர் செழும் பந்து அழகிய ஒரு பந்தை கையில்; கொண்டு வைத்துக்கொண்டு; நான் நான்; அடியா நின்றேன் அடித்துக்கொண்டிருந்தேன்; நீர் ஆர் நீர் நிலைகளிலுள்ள; கமலம் போல் தாமரைப் பூப் போன்ற; செங்கண் சிவந்த திருக்கண்களை; மால் உடைய திருமால்; என்று என்று சொல்லப்படுகிற; ஒருவன் ஒரு புருஷன்; பாரோர்கள் எல்லாம் உலகத்தாரனைவரும்; மகிழ மகிழும்படி; பறை கறங்க பறை என்ற வாத்யம் முழங்க; சீர் ஆர் குடம் சிறந்த குடங்கள்; இரண்டு ஏந்தி இரண்டு கையிலேந்திக்கொண்டு
kār ār kuzhal eduththuk katti taking up the tresses and tying them up (so that they will not be dishevelled); kadhir mulaiyai the resplendent bosoms; vār āra vīkki binding them tightly so that they would fill out the corset; maṇimĕgalai thiruththi properly wearing the waist cord which is decorated with gems; ār ār ayil vĕl kaṇ in the eyes which are beautiful and sharp like a spear; anjanaththin nīṛu aṇindhu applying powdered black pigment [mixed in oil]; sīr ār sezhu pandhu koṇdu taking a beautiful ball in the hand; nān adiyā ninṛĕn ī was playing with it! (during that time); nīr ār kamalam pŏl sem kaṇ one who has reddish eyes similar to lotus, which is present in abundance in water bodies; māl enṛa oruvan the purusha (supreme entity) who is called as thirumāl; pārŏrgal̤ ellām magizha such that all the people of the world are happy; paṛai kaṛanga with the musical instrument paṛai (a kind of drum) reverberating; sīr ār kudam iraṇdu ĕndhi holding two distinguished pots in his hand