இராமானுச நூற்றந்தாதி தனியங்கள் / Rāmānuja Nutrandāthi taṉiyaṉkal̤

சொல்லின் தொகை கொண்டுனதடிப் போதுக்குத் தொண்டு செய்யும்,
நல்லன்பர் ஏத்தமுன் நாமமெல்லாமென்றன் நாவினுள்ளே
அல்லும் பகலும் அமரும் படி நல்கு அறுசமயம்
வெல்லும் பரம, இராமானுச! இதென் விண்ணப்பமே

cŏlliṉ tŏkai kŏṇṭuṉataṭip potukkut tŏṇṭu cĕyyum,
nallaṉpar ettamuṉ nāmamĕllāmĕṉṟaṉ nāviṉul̤l̤e
allum pakalum amarum paṭi nalku aṟucamayam
vĕllum parama, irāmāṉuca! itĕṉ viṇṇappame
வேதப்பிரான் பட்டர் / vetappirāṉ paṭṭar
RNA.3-1
RNA.3-2
RNA.4-1
RNA.4-2

Word by word meaning

அந்தாதி ஓத இசை நூற்றந்தாதியை நீ அநுஸந்திப்பாயாக; அறுசமயம் ஆறுமதங்களையும்; வெல்லும் பரம கண்டித்தருளின; இராமாநுச! இராமாநுஜரே!; உனதடிப் போதுக்கு உங்கள் திருவடிகளிலே; தொண்டு செய்யும் தொண்டு செய்யும்; நல்அன்பர் பரம பக்தர்கள்; சொல்லின் தொகை சொல், தொகை, தொடைகளாலான; கொண்டு ஏத்தும் இப்பாசுரங்களைத் கொண்டு துதிக்கும்; உன் நாமம் எல்லாம் தங்கள் திருநாமங்களெல்லாம்; என்றன் நாவினுள்ளே என்தன் நாவினுள்ளே; அல்லும் பகலும் எப்பொழுதும்; அமரும்படி பொருந்தியிருக்கும்படி; நல்கு அருளவேண்டும்; இது என் விண்ணப்பமே இதுவே என் விண்ணப்பம்