இராமானுச நூற்றந்தாதி தனியங்கள் / Rāmānuja Nutrandāthi taṉiyaṉkal̤

முன்னை வினையகல மூங்கிற் குடியமுதன்
பொன்னங் கழற்கமலப் போதிரண்டும், - என்னுடைய
சென்னிக் கணியாகச் சேர்த்தினேன், தென்புலத்தார்க்
கென்னுக் கடவுடையேன் யான்

muṉṉai viṉaiyakala mūṅkiṟ kuṭiyamutaṉ
pŏṉṉaṅ kaḻaṟkamalap potiraṇṭum, - ĕṉṉuṭaiya
cĕṉṉik kaṇiyākac certtiṉeṉ, tĕṉpulattārk
kĕṉṉuk kaṭavuṭaiyeṉ yāṉ
வேதப்பிரான் பட்டர் / vetappirāṉ paṭṭar
RNA.1-1
RNA.1-2

Word by word meaning

அணியாக ஆபரணமாக; சேர்த்தினன் பொருந்த வைத்துக் கொண்டேன்; யான் இப்படி அமுதனாரின் திருவடிகளைச் சூடபெற்ற நான்; தென்புலத்தார்க்கு யம கிங்கரர்கள்; என்னுக்கு என் அருகே வருவதற்கு; கடவுடையேன் எந்தக் காரணமும் இல்லை; முன்னை வினை முன் செய்த பாபங்கள்; அகல தொலைய; மூங்கிற்குடி மூங்கிற்குடி என்னும் குலத்தில்; அமுதன் தோன்றிய திருவரங்கத்தமுதனாரின்; பொன்னான் பொன் போன்றதுவும்; கமலப் போது தாமரை போன்றதுமான; கழல் இரண்டும் திருவடிகள் இரண்டும்; என்னுடைய சென்னிக்கு என்னுடைய தலைக்கு