RNA 73

இராமானுசனை நினைப்பதே எனக்கு நிலை

3965 வண்மையினாலும் தன்மாதகவாலும் * மதிபுரையும்
தண்மையினாலும் இத்தாரணியோர்கட்கு * தான்சரணாய்
உண்மைநல்ஞானமுரைத்த இராமானுசனையுன்னும்
திண்மையல்லா லெனக்கில்லை * மற்றோர் நிலைதேர்ந்திடிலே.
3965 vaṇmaiyiṉālum taṉ mā takavālum * mati puraiyum
taṇmaiyiṉālum it tāraṇiyorkaṭku ** tāṉ caraṇāy
uṇmai nal ñāṉam uraitta irāmānucaṉai * uṉṉum
tiṇmai allāl ĕṉakku illai * maṟṟu or nilai terntiṭile (73)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3965. Rāmānujā with his ability, compassion and wisdom taught the people of the world truth and wisdom through his grace. Rāmānujā gave true knowledge to all the devotees and I do not know any other way to be than to think of Rāmānujā.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தன் வண்மையினாலும் தம்முடைய உதார குணத்தாலும்; மா தகவாலும் பரம கிருபையாலும்; மதி புரையும் சந்திரனை ஒத்த; தண்மையினாலும் உள்ளக் குளிர்ச்சியாலும்; இத் தாரணியோர்கட்கு இவ்வுலகத்திலுள்ளோர்க்கு; தான் சரணாய் தாமே காப்பாளராக; உண்மை நல் ஞானம் தம் உண்மை ஞானத்தை; உரைத்த இராமாநுசனை உபதேசித்த இராமாநுசரை; உன்னும் திண்மை அல்லால் சிந்திப்பதை தவிர; தேர்ந்திடிலே ஆராய்ந்து பார்த்தால்; எனக்கு அடியேனுக்கு; மற்று ஓர் நிலை. இல்லை வேறு ஒரு நிலையும் இல்லை
than vaṇmaiynālum By his generosity (which does not see (just the) greatness of meanings),; mā thagavālum and by his utmost kindness (which cannot bear to see the wrong paths (of the people)),; madhi puraiyum like the moon which removes heat, and which gives delight,; thaṇmaiyinālum by his coldness (pleasantness),; ith tharaṇiyŏrkatku to the ones in this world, as said in aṛivināl kuṛaivilam [thiruvāimozhi – 4.8.5] (we do not have interest in those matters that are not liked by emperumān),; thān charaṇāy having himself as the protector; gyānam uraiththa advised the knowledge (which is); uṇmai true (pāramārthika).; nal and distinguished;; irāmānusanai such emperumānār; unnum thinking of him as the protector; thiṇmai allāl other than that as destiny,; maṝŏr nilai illai there is no other sustenance,; enakku for me.