RNA 39

மனமே! இராமானுசனே நமக்குக் காவல்

3931 பொருளும்புதல்வரும்பூமியும் * பூங்குழலாருமென்றே
மருள்கொண்டிளைக்கும் நமக்குநெஞ்சே! * மற்றுளார்தரமோ
இருள்கொண்டவெந்துயர்மாற்றித்தன்னீறில்பெரும்புகழே
தெருளும்தெருள்தந்து * இராமானுசன்செய்யும் சேமங்களே.
3931 pŏrul̤um putalvarum pūmiyum * pūṅkuzhalārum ĕṉṟe
marul̤ kŏṇṭu il̤aikkum namakku nĕñce ** maṟṟu ul̤ār taramo
irul̤ kŏṇṭa vĕm tuyar māṟṟit taṉ īṟu il pĕrum pukazhe *
tĕrul̤um tĕrul̤ tantu * irāmānucaṉ cĕyyum cemaṅkal̤e? (39)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3931. O heart, we always think of wealth, children, lands, and women with beautiful hair and want them, worrying about how to get them. Our lord removed our desires and the troubles that they give us and gave us knowledge to know what is good and what will bring us fame.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பொருளும் பொருள் என்றும்; புதல்வரும் புதல்வர்கள் என்றும்; பூமியும் பூமி என்றும்; பூங்குழலாரும் அழகிய கூந்தலையுடைய; என்றே பெண்கள் என்றும்; மருள் கொண்டு அறிவு கெட்டு; இளைக்கும் நமக்கு வருந்தும் நமக்கு; இருள் கொண்ட அறிவின்மையோடு கூடிய; வெம் துயர் கடும் துயரங்களை; மாற்றி போக்கடித்து; தன் ஈறு இல் தம்முடைய முடிவில்லாத சிறந்த; பெரும் கல்யாண குணங்களையே; புகழே சிந்திக்கும்படி; தெருளும் தெருள் தந்து தெளிந்த ஞானத்தைத் தந்து; இராமாநுசன் இராமாநுசன்; செய்யும் சேமங்களே செய்யும் நன்மைகள்; நெஞ்சே! மனமே!; மற்று உளார் மற்றவர்களுக்குச் செய்கிற; மாதிரியோ? மாதிரியோ?
porul̤um ṃaterial things/ wealth; pudhalvarum sons,; bhūmiyum land,; pūnkuzhalārum enṛĕ wife, etc., and wishing for only these,; marul̤ koṇdu we had lost our sensibility;; il̤aikkum namakku for us who are sunken in that way,; vem thuyar māṝi he removed the cruel sorrows; irul̤ koṇda created due to lack of knowledge;; therul̤ thandhu and gave the knowledge; therul̤um for us to know; than his; eeṛil eternal; perum infinite; pugazhĕ auspicious qualities;; irāmānusan seyyum sĕmangal̤ (such) protections that emperumānār gives,; nenjĕ ŏh mind!; maṝul̤ār tharamŏ­ would others be any match to be able to do that?