RNA 38

இராமானுசனின் அருள் அளவிடமுடியாதது

3930 ஆக்கியடிமைநிலைப்பித்தனை என்னையின்று * அவமே
போக்கிப் புறத்திட்டதென்பொருளாமுன்பு? * புண்ணியர் தம்
வாக்கிற்பிரியாஇராமானுச! நின்னருளின்வண்ணம்
நோக்கில்தெரிவரிதால் * உரையாய்இந்தநுண்பொருளே.
3930 ākki aṭimai nilaippittaṉai * ĕṉṉai iṉṟu avame
pokkip puṟattiṭṭatu ĕṉ pŏrul̤ā muṉpu? ** puṇṇiyar tam
vākkil piriyā irāmānuca niṉ arul̤iṉ vaṇṇam *
nokkil tĕrivu aritāl * uraiyāy inta nuṇ pŏrul̤e (38)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3930. I thought that I am like god and can do anything but he made me understand that I am his slave. O lord, I was like that because you made me to stay away from you. I know you are compassionate and I do not understand why I had this trouble. O lord, you should tell me why you have not given your grace to me. You are Rāmānujā and you will not go against your promise.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என்னை அஹங்காரியாய்க்கிடந்த என்னை; இன்று இன்று; ஆக்கி ஒரு பொருளாக்கி; அடிமை கைங்கர்யத்தில்; நிலைப் பித்தனை நிலை நிறுத்தினீர்கள்; முன்பு முன்பெல்லாம்; அவமே போக்கி வீணாக; புறத்திட்டது புற விஷயங்களில் தள்ளி வைத்தது; என் பொருளா என்ன காரணத்தினால்; தம் தங்களை அநுபவிக்கும்; புண்ணியர் பாக்யசாலிகளுடைய; வாக்கில் பிரியா வாக்கை விட்டுப்பிரியாத; இராமாநுச! இராமாநுசரே!; நின் அருளின் நின் அருளின்; வண்ணம் தன்மை என்ன; நோக்கில் என்று பார்த்தால்; அரிதால் அறியமுடியாததாக; தெரிவு இருக்கிறது; இந்த நுண் பொருளே இந்த நுட்பத்தை நீங்களே; உரையாய் அருள் கூர்ந்து உரைக்கவேண்டும்
ennai ṃe who has been like īsvarŏham (considering my self as the lord) from time eternal,; ākki made me agree for being subservient; adimai and made it go up to the ultimate state of being subservient to devotees; nilaippiththanai and so your highness made me be in that state;; inṛu while you have been able to do this now,; munbu in the times before this; avamĕ (you had) uselessly; pŏkki kept; puṛaththittadhu (me) left away in worldly matters; en porul̤ā for what purpose is that?; puṇṇiyar tham ṭhose fortunate ones who know your highness as is,; vākkil piriyā irāmānusa you are being the matter of their talk at all times!; nŏkkil When seeing that; therivaridhu it is not being possible to know; arul̤in vaṇṇam the way/nature of kindness; nin of your highness {such that you had kept me away all this time},;; uraiyāy your highness itself should tell us about; indha nuṇ porul̤ these subtle ways.