பெரிய ஜீயர் அருளிய உரை
முப்பத்து ஏழாம் பாட்டு –அவதாரிகை – இப்படி இருக்கிற இவர் தம்மை நீர் தாம் அறிந்து பற்றின படி என் -என்ன நான் அறிந்து பற்றினேன் அல்லேன் – அவர் திருவடிகளில் சம்பந்தம் உடையவர்களே -உத்தேச்யர் என்றும் இருக்குமவர்கள் – என்னையும் அங்குத்தைக்கு சேஷம் ஆக்கினார்கள்-என்கிறார் –
படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் **குடி கொண்ட