RNA 34

இராமானுசனின் புகழ்தான் என்னே?

3926 நிலத்தைச்செறுத்துண்ணும் நீசக்கலியை * நினைப்பரிய
பலத்தைச்செறுத்தும் பிறங்கியதில்லை * என்பெய்வினை தென்
புலத்திற்பொறித்தவப்புத்தகச்சும்மைபொறுக்கியபின்
நலத்தைப்பொறுத்தது * இராமானுசன்தன்நயப்புகழே.
3926 nilattaic cĕṟuttu uṇṇum nīcak kaliyai * niṉaippu ariya
palattaic cĕṟuttum piṟaṅkiyatu illai ** ĕṉ pĕy viṉai tĕṉ
pulattil pŏṟitta ap puttakac cummai pŏṟukkiya piṉ *
nalattaip pŏṟuttatu * irāmānucaṉ taṉ nayap pukazhe (34)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3926. Even though the lord destroyed of all his enemies, the poverty of the world did not go away, but Rāmānujā destroys the terrible poverty that afflicts the people of the world. If I praise Rāmānujā my poverty will be removed, and I will have a good life.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இராமாநுசன் தன் இராமாநுசருடைய; நயப் புகழே கல்யாணகுணங்கள்; நிலத்தைச் செறுத்து பூலோகத்தை துன்புறுத்தி; உண்ணும் நீசக் கலியை நீசக் கலியின்; நினைப்பு அரிய அளவற்ற; பலத்தை பராக்ரமத்தை; செறுத்தும் தொலைத்தும்; பிறங்கியது இல்லை பிரகாசிக்கவில்லை; என் அடியேனால் செய்யப்பட்ட; பெய்வினை பாவங்களை; தென் புலத்தில் யமலோகத்தில்; பொறித்த எழுதி வைத்த; அப் புத்தகச் சும்மை அந்த புத்தகக் கட்டுக்களை; பொறுக்கிய பின் கொளுத்திவிட்ட பின்பு; நலத்தைப் பொறுத்தது ஒளி பெற்றுவிட்டன
neesak kaliyai kali yugam that is to be avoided; seṛuththu which troubled; uṇṇum and harmed; nilaththai the world,; palaththai which is of strength; ninaippariya that cannot be comprehended by mind;; irāmānusan than emperumānārs; pugazh hundreds of excellent qualities; nayam which are desirable, had; seṛuththum (emperumānār) removed the effects of such kali yugam; piṛangiyathillai his greatness did not become distinguished;; vinai karmas of bad deeds; pey created; en by me myself,; poṛiththa that are written recorded; then pulaththil in the world of yama,; poṛukkiya pin only after burning; ap puththagach chummai those weighty books,; nalaththai poṛuththadhu did emperumānārs greatness got its being.