RNA 3

மனமே! என்னை இராமானுசன் அடியார்க்கு அடியவனாக்கினாயே! உன்னை வணங்கினேன்

3895 பேரியல்நெஞ்சே! அடிபணிந்தேனுன்னை * பேய்ப்பிறவிப்
பூரியரோடுள்ள சுற்றம்புலர்த்தி * பொருவருஞ்சீர்
ஆரியன்செம்மை இராமானுசமுனிக்கன்புசெய்யும்
சீரியபேறுடையார் * அடிக்கீழ்என்னைச்சேர்த்ததற்கே.
3895 per iyal nĕñce aṭi paṇinteṉ uṉṉai * peyp piṟavip
pūriyaroṭu ul̤l̤a cuṟṟam pulartti ** pŏruvu arum cīr
āriyaṉ cĕmmai irāmānucamuṉikku aṉpu cĕyyum *
cīriya peṟu uṭaiyār * aṭikkīzh ĕṉṉaic certtataṟke (3)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3895. O good heart! I bow to your feet. You took me away from selfish people and made me join the devotees who have the fortune of worshiping the sage Rāmānujā of excellent fame.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பேர் இயல் நெஞ்சே! மிகவும் கம்பீரமான மனமே!; உன்னை உன்னை; அடிபணிந்தேன் வணங்குகின்றேன் ஏனெனில்; பேய்ப்பிறவி அஸுரப் பிறப்பையுடையவர்களான; பூரியரோடு உள்ள நீசர்களோடு எனக்கு இருந்த; சுற்றம் புலர்த்தி உறவை நீக்கி; பொருவு ஒப்பற்ற; அரும் சீர் குணங்களையுடையவரும்; ஆரியன் ஒழுக்கங்களை உடையவரும்; செம்மை சிறந்த; இராமாநசமுனிக்கு இராமாநுசரிடம்; அன்பு செய்யும் பக்தி செய்வதையே கொண்ட; சீரிய பேறு கூரத்தாழ்வான்; உடையார் போன்றவர்களுடைய; அடிக்கீழ் திருவடிக்கீழே; என்னை என்னைக் கொண்டு; சேர்த்ததற்கே சேர்த்ததற்காகவே; உன்னை உன்னை; அடிபணிந்தேன் வணங்குகிறேன்
pĕr iyal nenjĕ ŏh mind! having big ways of kindness,; ul̤l̤a suṝam pularththi (for) removing my connection with (people); pĕy piṛavi (who are) bad by nature; pūriyarodu ul̤l̤a and who are having bad qualities like ahankāra/mamakāra,; ennaich chĕrththadharkku and for the biggest help of connecting me to; adikkīzh at the divine feet of; sīriya pĕr udaiyār people having reached that goal of; anbu seyyum doing bhakthi towards; irāmānusa munikku emperumānār (who); poruvarum sīr possesses incomparable good qualities; āriyan and who knows very well all the sāsthras; semmai and who is having sincerity in adjusting himself to be able to take care of his sishyas without looking at their differing qualities,; unnai adi paṇindhĕn (ŏ mind!) ī fall on your feet.