RNA 29

இராமானுசனின் அடியார்களைச் சேரும் நான் எந்நாளோ?

3921 கூட்டும்விதியென்றுகூடுங்கொலோ? * தென்குருகைப்பிரான்
பாட்டென்னும் வேதப்பசுந்தமிழ்தன்னை * தன்பத்தியென்னும்
வீட்டின்கண்வைத்தஇராமானுசன்புகழ்மெய்யுணர்ந்தோர்
ஈட்டங்கள்தன்னை * என்நாட்டங்கள்கண்டின்பமெய்திடவே.
3921 kūṭṭum viti ĕṉṟu kūṭuṅkŏlo * tĕṉ kurukaippirāṉ
pāṭṭu ĕṉṉum * vetap pacuntamizh taṉṉai ** taṉ patti ĕṉṉum
vīṭṭiṉ kaṇ vaitta irāmānucaṉ pukazh mĕy uṇarntor *
īṭṭaṅkal̤ taṉṉai * ĕṉ nāṭṭaṅkal̤ kaṇṭu iṉpam ĕytiṭave? (29)

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3921. Rāmānujā, the devotee of the lord, who recited wonderful Tamil Pasurams like the Vedās, is famous and the god will give him Mokshā. Does my fate give me the fortune of worshiping the devotees who understand the fame of Rāmānujā?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தென் குருகைப்பிரான் நம்மாழ்வாருடைய; பாட்டு திருவாய்மொழித் தமிழ்; என்னும் பாசுரங்கள்; வேதம் வேதரூபமாய்; பசுந்தமிழ் தன்னை செந்தமிழ் வேதமான திருவாய்மொழியை; தன் பத்தி என்னும் தம்முடைய பக்தியாகிற; வீட்டின் மாளிகையிலே; கண் வைத்த நிலை நிறுத்தி வைத்த; இராமாநுசன் இராமாநுசனின்; புகழ் கல்யாண குணங்களை; மெய் உள்ளபடி; உணர்ந்தோர் அறிந்திருக்கும் அவர்களுடைய; ஈட்டங்கள் தன்னை கூட்டங்களை; என் நாட்டங்கள் என் கண்கள்; கண்டு கண்டு வணங்கி; இன்பம் எய்திட இன்பம் பெற்றிட; கூட்டும் விதி என்று அவருடைய அருள்; கூடுங்கொலோ ? என்றைக்கு வாய்க்குமோ?
then Beautiful to the eyes; kurugaip pirān that is (āzhvār) thirunagari; its lord, that is nammāzhvār; his; pāttu ennum prabandham, which is famously known that way,; vĕdham in the form of vĕdham; pasum thamizh thannai that is thiruvāimozhi, which is in the form of beautiful thamizh;; irāmānusan emperumānār; than paththi ennum whose devotion; veettin kaṇ vaiththa is the living place where he kept (such thiruvāimozhi), his; uṇarndhŏr who have known the; pugazh auspicious qualities (of such emperumānār); mey in its true form,; eettangal̤ thannai such groups of them,; en nāttangal̤ kaṇdu my eyes to see them; eydhida and attain; inbam joy; kūttum (his grace) which can help join me with them; vidhi enṛu kūdum kolŏ when by his grace it would come together?; vidhi sukruth – his giving the grace/opportunity.; inbam – prĕmam love. ṭhat could happen by emperumānārs grace only.; ḥis prayer is un thoṇdarkkĕ anbuṝu irukkaumpadi ennai ākki angātpadhuththu [rāmānusa nūṝathādhi 107] (m̐ please make me stay loving of your devotees, make me subservient);; eettam ­ assembly of people; nāttam – seeing.