RNA 108

மனமே! இராமானுசனின் திருவடி நம் தலைமீது தாங்கவேண்டுமென்று திருமகளைப் போற்றுவோம்

4000 அங்கயல்பாய்வயல்தென்னரங்கன் * அணியாகமன்னும்
பங்கயமாமலர்ப்பாவையைப் போற்றுதும் * பத்தியெல்லாம்
தங்கியதென்னத்தழைத்துநெஞ்சே! நம்தலைமிசையே
பொங்கியகீர்த்தி * இராமானுசனடிப்பூ மன்னவே. (2)
4000 ## am kayal pāy vayal tĕṉ araṅkaṉ * aṇi ākam maṉṉum
paṅkaya mā malarp * pāvaiyaip poṟṟutum ** patti ĕllām
taṅkiya tĕṉṉat tazhaittu nĕñce! nam talaimicaiye *
pŏṅkiya kīrtti * irāmānucaṉ aṭip pū maṉṉave (108)

Ragam

Surutti / சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

4000. O heart flourishing with devotion, let us praise Lakshmi, seated on the chest of the lord of southern Srirangam surrounded with fields where beautiful fish frolic. Let me worship the lord so I may approach the feet of illustrious Rāmānujā.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெஞ்சே! ஓ நெஞ்சே!; பத்தி எல்லாம் பக்தி எல்லாம் நம்மிடத்திலே; தங்கியது குடிகொண்ட தென்று; என்ன சொல்லும்படியாக; தழைத்து வீறுபெற்று; பொங்கிய கீர்த்தி பரந்த புகழையுடையவரான; இராமாநுசன் இராமாநுசரின்; அடிப் பூ திருவடித் தாமரைகள்; நம் தலைமிசையே நமது தலைமேலே; மன்னவே நிலைத்து நிற்க நாம் செய்யவேண்டியது; அம் கயல் பாய் அழகிய கயல் மீன்கள் பாய்கிற; வயல் கழனிகள் சூழ்ந்த; தென் அரங்கன் தென் அரங்கத்தில்; அணி ஆக மன்னும் அழகிய திருமார்பிலிருக்கும்; பங்கய மா மலர் தாமரையில் பிறந்த; பாவையை பதுமை போன்ற மகாலக்ஷ்மியை; போற்றுதும் வாழ்த்துவோம்
nenjĕ ŏh mind!; paththi the thathvam of devotion (bhakthi) (prāpya ruchi – taste/interest for getting the destiny),; ellām without a residue (whole of it); thangiyadhenna can be said as residing in us; thazhaiththu and has increased;; pongiya keerththi glory that has spread everywhere, (which emperumānār is having),; beautiful blossomed flower that is; adi the divine feet; irāmānusan of emperumānār,; manna for emperumānārs divine feet to reside in our head (nithya vāsam) (prāpya siddhi); nam thalai misaiyĕ on our head,; am beautiful; kayal fish; pāy jumping around, and; vayal the place having paddy fields, and; then beautiful to the eyes, (such ṣrīrangam); mannum ṣhe who is residing permanently as agalakillĕn iṛaiyum [thiruvāimozhi – 6.10.10] (would not leave ever), (ṣrayathĕ (surrendered to ḥim)); aṇi beautiful; āgam divine chest; arangan of periya perumāl̤ who is having kŏyil (ṣrīrangam) itself as ḥis identity,; pangaya mā malar and ṣhe having great lotus flower as the place of stay; pāvaiyai that is, ṣrīranga nāchchiyār who is having subservience (to emperumān); pŏṝudhum let us surrender to her ((ṣrīyathĕ) we surrender to ḥer).; pŏṝu worship/prostrate; also praising