RNA 104

இராமானுச! நின் புகழ் பேசுவது ஒன்றுதான் எனக்கு வேண்டும்

3996 கையிற்கனியென்னக் கண்ணனைக் காட்டித்தரிலும் * உன்தன்
மெய்யிற் பிறங்கியசீரன்றி வேண்டிலன்யான் * நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதிவிண் சேரிலும் இவ்வருள்நீ
செய்யில் தரிப்பன் * இராமானுச! என்செழுங் கொண்டலே!
3996 kaiyil kaṉi ĕṉṉak * kaṇṇaṉaik kāṭṭit tarilum * uṉ taṉ
mĕyyil piṟaṅkiya cīr aṉṟi veṇṭilaṉ yāṉ ** nirayat
tŏyyil kiṭakkilum coti viṇ cerilum iv arul̤ nī *
cĕyyil tarippaṉ * irāmānuca ĕṉ cĕzhuṅ kŏṇṭale (104)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3996. O Rāmānujā as generous as a rain-giving cloud, as if you placed a fruit in my hand and gave it to me, you showed me Kannan. I do not want anything except your grace. Whether I stay in the deep hole of hell, in heaven or in shining Mokshā, I will survive only if you give me your grace.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செழும் கொண்டலே! உதார குணத்தில் மேகம் போன்றவரே!; என் இராமாநுச! எங்கள் இராமாநுசரே!; கண்ணனை எம்பெருமானை; கையில் கனி என்ன உள்ளங்கை நெல்லிக் கனிபோல்; காட்டித் தரிலும் காட்டிக் கொடுத்தாலும்; உன் தன் மெய்யில் உன் திருமேனி அழகையும்; பிறங்கிய சீர் அன்றி குணங்களையும் தவிர; யான் வேறு ஒன்றையும்; வேண்டிலன் நான் பார்க்கமாட்டேன்; நிரயத் தொய்யில் ஸம்ஸாரம் என்னும் நரகக் குழியில்; கிடக்கிலும் இருந்தாலும்; சோதி விண் சோதிமயமான பரம பதத்தை; சேரிலும் அடைந்தாலும்; இவ் அருள் நீ மேனியழகை அநுபவித்திருக்கைக்கு அருளினால்; செய்யில் தரிப்பன் கால் பாவி நிற்பேன்
sezhum koṇdal distinguished and most generous like a cloud; em irāmānusā ŏh you who showed (that kindness) to us!; kāttith tharilum (even if you) get me to see the; kaṇṇanai sarvĕṣvaran who is easy to attain for ḥis devotees; kaiyil kani anna like a gooseberry fruit in the palm of the hand (that is, easily and fruitfully),; yān ī; vĕṇdilan would not want (anything); seer anṛi other than the qualities of beauty etc.,; unṛan of your; piṛangiya bright; meyyil divine body;; kidakkilum immersed in; nirayth thoyyil slushy mud, that is samsāram;; sĕrilum reached; viṇ paramapadham; sŏdhi which is of boundless radiance; iv arul̤ this grace for that,; nee seyyil tharippan if you do that, ī will stay put in some place; ŏtherwise, ī would not be able to sustain myself, is the thought.; piṛangu brightness; nirayam – samsāram that is vidiyā ven narakam [thiruvāimozhi 2.6.7] (m̐hell with no light at the end of the tunnel).; thoyyil mud;; When some recite as nirayath thoyyil kidakil en, sŏdhi viṇ sĕril en it does not matter whether ī stay put in samsāram or ī reach paramapatham – ī have got nothing to do with them;