RNA 100

இராமானுச! நின் திருவடிகளிலேயே என்னை இருத்து

3992 போந்ததென்னெஞ்சென்னும் பொன்வண்டு * உனதடிப்போதில் ஒண்சீ
ராந்தெளிதேனுண்டமர்ந்திடவேண்டி * நின்பாலதுவே
ஈந்திடவேண்டும் இராமானுச! இதுவன்றியொன்றும்
மாந்தகில்லாது * இனிமற்றொன்று காட்டிமயக்கிடலே.
3992 pontatu ĕṉ nĕñcu ĕṉṉum pŏṉ vaṇṭu * uṉatu aṭippotil
ŏṇ cīr ām tĕl̤i teṉ uṇṭu amarntiṭa veṇṭi ** niṉpāl atuve
īntiṭa veṇṭum irāmānuca itu aṉṟi ŏṉṟum *
māntakillātu * iṉi maṟṟu ŏṉṟu kāṭṭi mayakkiṭale (100)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3992. O Rāmānujā, my heart is a golden bee that worships your pure honey-like feet. I will not follow any other religion— no one can make me to learn their teachings, for I want only to drink in the sweet milk of your devotion.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இராமாநுச! இராமாநுசரே!; என்நெஞ்சு என்னும் என் நெஞ்சாகிற; பொன்வண்டு அழகிய வண்டு; உனது அடிப்போதில் தங்கள் திருவடித் தாமரையின்; ஒண்சீர்ஆம் தெளி அழகிய குணங்களாகிற தெளிந்த; தேன் உண்டு தேனைப்பருகி; அமர்ந்திட வேண்டி வாழ்ந்திட விரும்பி; நின் பால் தங்களிடத்தில்; போந்தது வந்து சேர்ந்தது; அதுவே அந்த குணங்களையே; ஈந்திட வேண்டும் அளித்திட வேண்டும்; இது அன்றி இக் குணங்களைத்தவிர; ஒன்றும் வேறு எதையும்; மாந்த கில்லாது உண்ணாது என் நெஞ்சு; இனி மற்று ஆதலால் வேறு; ஒன்று காட்டி விஷயத்தைக் காட்டி; மயக்கிடலே மயக்க வேண்டாம்
pon vaṇdu beautiful bee; en that is my; nenju ennum mind; pŏndhadhu came; nin pāl to you; uṇdu to drink; thel̤i clear (transparent); thĕn honey; oṇ seerām that is, your auspicious qualities like chaithyam (refreshingly cool), mārdhavam (softness), saurabhyam (fragrant), etc.,; pŏdhil from the flower; unadhu that is your; adi divine feet,; amarndhida vĕṇdi and stay there for ever (nithya vāsam);; eendhida vĕṇdum your highness should give; adhuvĕ that only,; irāmāusa! ŏh udaiyavar!; idhu anṛi other than this; māndhakillādhu it would not accept/consume; onṛum any thing else;; ini now (from now on); mayakkidal please do not besot me; maṝonṛu kātti by showing something else.