பெரிய திருமொழித் தனியன்கள் / Periya Thirumozhi taṉiyaṉkal̤

நெஞ்சுக்கிருள்கடி தீபம் அடங்கா நெடும் பிறவி
நஞ்சுக்கு நல்லவமுதம் *
தமிழ் நன்நூல் துறைகள் அஞ்சுக்கிலக்கியம் ஆரண சாரம் *
பரசமயப் பஞ்சுக்கனலின் பொரி *பரக்காலன் பனுவல்களே

nĕñcukkirul̤kaṭi tīpam aṭaṅkā nĕṭum piṟavi
nañcukku nallavamutam *
tamiḻ naṉnūl tuṟaikal̤ añcukkilakkiyam āraṇa cāram *
paracamayap pañcukkaṉaliṉ pŏri *parakkālaṉ paṉuvalkal̤e
ஆழ்வான் / āḻvāṉ
PT.T-3-4
Nenjukku

Word by word meaning

பரகாலன் திருமங்கை ஆழ்வாரின்; பனுவல்களே அருளிச்செயல்கள் எப்படி என்றால்; நெஞ்சுக்கு மனதில் உண்டான; இருள் இருளை; கடி தீபம் போக்கக்கூடிய திருவிளக்காம்; அடங்கா ஒன்றுக்கும் அடங்காத; நெடும் பிறவி நீண்ட ஸம்ஸாரத் துயறம் போன்ற; நஞ்சுக்கு விஷத்தை அறுப்பதற்கான; நல்ல அமுதம் நல்ல அமுதமாம்; தமிழ் தமிழில்; நன்னூல் நல்ல நூல்களில் சொல்லப்பட்ட; துறைகள் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்கிற; அஞ்சுக்கு ஐந்து இலக்கணங்களுக்கும்; இலக்கியம் இலக்கியமாம் இவை; ஆரண சாரம் வேதங்களின் ஸரமானவை; பர சமய பஞ்சுக்கு வேற்று மதங்களாகிய பஞ்சுக்கு; அனலின் பொறி நெருப்புப் பொறியாம்