PT 9.7.8

யாக்கை நிலையாது: வல்லவாழ் நினை

1815 மஞ்சுசேர்வானெரி நீர்நிலம்காலிவைமயங்கிநின்ற *
அஞ்சுசேராக்கையை அரணமன்றென்றுயக்கருதினாயேல் *
சந்துசேர்மென்முலைப் பொன்மலர்ப்பாவையும்தாமும் * நாளும்
வந்துசேர்வல்லவாழ் சொல்லுமாவல்லையாய்மருவுநெஞ்சே!
1815 mañcu cer vāṉ ĕri * nīr nilam kāl ivai mayaṅki niṉṟa *
añcu cer ākkaiyai * araṇam aṉṟu ĕṉṟu uyak karutiṉāyel **
cantu cer mĕṉ mulaip * pŏṉ malarp pāvaiyum tāmum * nāl̤um
vantu cer vallavāzh * cŏllumā vallai āy maruvu nĕñce 8

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1815. O heart, do you realize that the body made of sky where clouds float, and of fire, water, earth and air is not a fortress and that it will not save you? Go to Thiruvallavazh and worship the lord who stays with statue-like Lakshmi seated on a lotus, her soft breasts smeared with sandal paste.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெஞ்சே! மனமே!; மஞ்சு சேர் மேகங்கள் ஸஞ்சரிக்கும்; வான் ஆகாசம்; எரி நீர் நிலம் அக்நி நீர் நிலம்; கால் காற்று ஆகிய; இவை இந்த பஞ்சபூதங்களும்; மயங்கி நின்ற ஒன்றாக இருக்கும்; அஞ்சு சேர் பஞ்ச பௌதிகமான; ஆக்கையை சரீரத்தை; அரணம் காக்கும் அரண்; அன்று என்று ஆகாது என்று; உயக் கருதினாயேல் உணர்ந்தாயாகில்; சந்து சேர் சந்தனமணிந்த; மென் மென்மையான; முலை ஸ்தனங்களையுடைய; பொன் மலர் பாவையும் திருமகளும்; தாமும் தாமுமாக; நாளும் எப்போதும்; வந்து சேர் கூடிவாழுமிடமான; வல்லவாழ் திருவல்லவாழ் என்று; சொல்லுமா வாயாரச் சொல்லி உய்வு பெரும்; வல்லை ஆய் வல்லமையுடையவரை; மருவு அடைவாய்