PT 9.7.3

திருவல்லவாழ் என்று அஞ்சாமல் சொல்

1810 பூணுலாமென்முலைப்பாவைமார் பொய்யினைமெய்யிதென்று *
பேணுவார்பேசும்அப்பேச்சை நீபிழையெனக்கருதினாயேல் *
நீணிலாவெண்குடைவாணனார் வேள்வியில்மண்ணிரந்த *
மாணியார்வல்லவாழ் சொல்லுமாவல்லையாய்மருவுநெஞ்சே!
1810 பூண் உலாம் மென் முலைப் பாவைமார் * பொய்யினை மெய் இது என்று *
பேணுவார் பேசும் அப் பேச்சை * நீ பிழை எனக் கருதினாயேல் **
நீள் நிலா வெண் குடை வாணனார் * வேள்வியில் மண் இரந்த *
மாணியார் வல்லவாழ் * சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே 3
1810 pūṇ ulām mĕṉ mulaip pāvaimār * pŏyyiṉai mĕy itu ĕṉṟu *
peṇuvār pecum ap peccai * nī pizhai ĕṉak karutiṉāyel **
nīl̤ nilā vĕṇ kuṭai vāṇaṉār * vel̤viyil maṇ iranta *
māṇiyār vallavāzh * cŏllumā vallai āy maruvu nĕñce 3

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1810. O heart, if you think it is wrong to believe the lies that statue-like women with ornamented breasts tell lovingly and if you want to survive, go to famous Thiruvallavāzh, the place of the lord, who, carrying a white umbrella as bright as the moon, went as a dwarf and begged for three feet of land at the sacrifice of Mahabali.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
நெஞ்சே! மனமே!; பூண் உலாம் ஆபரணங்கள் அணிந்த; மென் மென்மையான; முலை மார்பகங்களையுடைய; பாவைமார் பெண்களின்; பொய்யினை பொய்யான பேச்சை; மெய் இது என்று உண்மை என்று; பேணுவார் ஆதரித்து; பேசும் பேசுபவர்கள் பேசும்; அப்பேச்சை நீ அப்பேச்சை நீ; பிழை என தவறு என்று; கருதினாயேல் கருதுவாயானால்; நீள் நிலா நிலாவைப்போன்று; வெண் குடை வெளுத்த குடையுடைய; வாணனார் மகாபலியின்; வேள்வியில் வேள்வியில்; மண் இரந்த மூவடி மண் யாசித்த; மாணியார் வாமனன் வாழும் இடமான; வல்லவாழ் திருவல்லவாழ் என்று; சொல்லுமா வாயாரச் சொல்லி உய்வு பெரும்; வல்லை ஆய் வல்லமையுடையவரை; மருவு அடைவாய்