PT 9.7.10

உலகை ஆண்டு இன்புறுவர்

1817 மறைவலார்குறைவிலாருறையுமூர் வல்லவாழடிகள்தம்மை *
சிறைகுலாவண்டறைசோலைசூழ் கோலநீளாலிநாடன் *
கறையுலாவேல்வல்ல கலியன்வாய்ஒலியிவைகற்றுவல்லார் *
இறைவராய்இருநிலம்காவல்பூண்டு இன்பம்நன்கெய்துவாரே. (2)
1817 ## maṟaivalār kuṟaivu ilār uṟaiyum ūr * vallavāzh aṭikal̤-tammai *
ciṟai kulām vaṇṭu aṟai colai cūzh * kola nīl̤ āli nāṭaṉ **
kaṟai ulām velvalla * kaliyaṉ vāy ŏli ivai kaṟṟu vallār *
iṟaivar āy iru nilam kāval pūṇṭu * iṉpam naṉku ĕytuvāre 10

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1817. Kaliyan, the chief of flourishing Thiruvāli, who fights his enemies valiantly with his blood-smeared spear, composed ten pāsurams on the faultless god of Thiruvallavazh where many Vediyars live reciting the Vedās, surrounded with groves swarming with lovely-winged bees. If devotees learn and recite these pāsurams they will become kings, ruling and enjoying this wide world.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மறைவலார் வேதார்த்தம் அறிந்தவர்கள்; குறைவு குறைவொன்றும்; இலார் இல்லாதவர்களாய்; உறையும் ஊர் வாழும் ஊர்; வல்லவாழ் திருவல்லவாழ்; அடிகள் தம்மை அடியார்களைக் குறித்து; சிறை சிறகுகளையுடைய; வண்டு வண்டுகள்; குலா அறை களிப்புடன் பாடும்; சோலை சூழ் சோலைகள் சூழ்ந்த; கோல நீள் அழகிய பெரிய; ஆலி நாடன் திருவாலி நாட்டரசன்; கறை உலாம் கறையுடன் கூடின; வேல்வல்ல வேலாயுதத்தையுடைய; கலியன் வாய் திருமங்கை ஆழ்வார்; ஒலி இவை அருளிச்செய்த பாசுரங்களை; கற்று வல்லார் ஓத வல்லார்; இறைவர் ஆய் இந்த உலகை ஆண்டு; இரு நிலம் காவல் பூண்டு மேல் உலகின்; இன்பம் நன்கு ஆனந்தத்தையும்; எய்து வாரே அடைவார்கள்