PT 9.7.1

மனமே! திருவல்லவாழைச் சொல்ல நினை

1808 தந்தைதாய்மக்களே சுற்றமென்றுற்றவர்பற்றிநின்ற *
பந்தமார்வாழ்க்கையை நொந்துநீபழியெனக்கருதினாயேல் *
அந்தமாய்ஆதியாய் ஆதிக்குமாதியாய்ஆயனாய *
மைந்தனார்வல்லவாழ் சொல்லுமாவல்லையாய்மருவுநெஞ்சே. (2)
1808 ## tantai tāy makkal̤e * cuṟṟam ĕṉṟu uṟṟavar paṟṟi niṉṟa *
pantam ār vāzhkkaiyai * nŏntu nī pazhi ĕṉak karutiṉāyel **
antam āy āti āy * ātikkum āti āy āyaṉ āya *
maintaṉār vallavāzh * cŏllumā vallai āy maruvu nĕñce 1

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1808. O heart, if you are suffering with your family, your father, mother, children and others, and if you feel you should not be burdened with them, go to famous Thiruvallavazh where the young lord, the cowherd who is the beginning, the end, the ancient of the ancients stays, worship and praise him and love him in your mind.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெஞ்சே! மனமே!; தந்தை தாய் தந்தை தாய்; மக்களே பிள்ளைகள்; சுற்றம் உறவு முறையார்; என்று உற்றுவர் ஸம்பந்திகள் என்று; பற்றி நின்ற பற்றி கொண்டு நிற்கும்; பந்தம் ஆர் ஸம்ஸார பந்தமான; வாழ்க்கையை வாழ்க்கையை; நொந்து வெறுத்து; நீ பழி என நீ தவறு என்று; கருதினாயேல் கருதினாயாகில்; அந்தமாய் பிரளயத்தில் லயமாயும்; ஆதியாய் ச்ருஷ்டியாயும்; ஆதிக்கும் காரணமாயும்; ஆதியாய் சேதனங்களையும் அனைத்தையும் நிர்வகிப்பவனாயும்; ஆயனாய கண்ணனாய் அவதரித்த; மைந்தனார் பெருமானை; வல்லவாழ் திருவல்லவாழ் என்று; சொல்லுமா வாயாரச் சொல்லி உய்வு பெரும்; வல்லை ஆய் வல்லமையுடையவரை; மருவு அடைவாய்