PT 9.4.9

தூக்கமே இல்லை: எனினும் புல்லாணி தொழுதேன்

1786 வேதமும்வேள்வியும் விண்ணும் இருசுடரும் *
ஆதியுமானான் அருள்தந்தவா! நமக்கு *
போதலரும்புன்னைசூழ் புல்லாணிகைதொழுதேன் *
ஓதமும்நானும் உறங்காதிருந்தேனே.
1786 vetamum vel̤viyum * viṇṇum iru cuṭarum *
ātiyum āṉāṉ * arul̤tantavā namakku **
potu alarum puṉṉai cūzh * pullāṇi kaitŏzhuteṉ *
otamum nāṉum * uṟaṅkātu irunteṉe-9

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Saranagathi

Divya Desam

Simple Translation

1786. She says, “He, the ancient god who is the Vedās, the sky, the sun and the moon gives his grace to us. I fold my hands and worship him in Thiruppullāni surrounded with punnai trees blooming with opening buds. I and the waves of the ocean do not sleep. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வேதமும் வேள்வியும் வேதங்கள் யாகங்கள்; விண்ணும் ஸ்வர்க்கங்கள்; இருசுடரும் சூரிய-சந்திரன் ஆகியவைகளுக்கு; ஆதியும் ஆனான் காரணபூதனான எம்பெருமான்; நமக்கு! என் விஷயத்தில்; அருள் தந்தவா அருளா செய்தான் அந்தோ!; போது அலரும் பூக்கள் மலர்ந்திருக்கும்; புன்னை சூழ் புன்னை மரங்களால் சூழ்ந்த; புல்லாணி திருப்புல்லாணியை; கைதொழுதேன் வணங்கினேன்; ஓதமும் நானும் கடல் அலைகளும் நானும்; உறங்காது கண்ணுறங்காமல்; இருந்தேனே இருந்தோம்