PT 9.4.7

பிரிவுத்துயர் வதைக்கின்றது: எனினும் புல்லாணி தொழுதேன்

1784 கனையாரிடிகுரலின் கார்மணியின்நாவாடல் *
தினையேனும்நில்லாது தீயிற்கொடிதாலோ *
புனையார்மணிமாடப் புல்லாணிகைதொழுதேன் *
வினையேன்மேல்வேலையும் வெந்தழலேவீசுமே.
1784 kaṉai ār iṭi-kuraliṉ * kār maṇiyiṉ nā āṭal *
tiṉaiyeṉum nillātu * tīyil kŏṭitālo **
puṉai ār maṇi māṭap * pullāṇi kaitŏzhuteṉ *
viṉaiyeṉmel velaiyum * vĕm tazhale vīcume-7

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Saranagathi

Divya Desam

Simple Translation

1784. She says, “The sound of thunder and the ringing of the cowbells never cease, burning me even more than fire. I fold my hands and worship him in Thiruppullāni filled with beautiful jewel-studded palaces. I have done bad karmā. The wind from the ocean blows hot on me. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கனை ஆர் இடி குரலின் இடி போன்ற ஓசையுடன்; கார் மணியின் கறுத்த ரிஷபத்தின் மணியின்; நா ஆடல் நாக்கின் ஒலியானது; தினையேனும் நில்லாது கொஞ்சமும் ஓயாமல்; தீயில் நெருப்பைக் காட்டிலும்; கொடிதாலோ! கொடியதாக உள்ளது அந்தோ!; புனை ஆர் அழகிய; மணி மாட மணி மாடங்களையுடைய; புல்லாணி திருப்புல்லாணியை; கைதொழுதேன் வணங்கிய; வினையேன்மேல் பாவியான என் மேல்; வேலையும் கடல் அலைகள்; வெம் தழலே கொடிய நெருப்பையே; வீசுமே வீசுகின்றன