PT 9.4.2

பறவைகளே! என் துயரை ஜகந்நாதனிடம் சொல்லுங்கள்

1779 முன்னம்குறளுருவாய் மூவடிமண்கொண்டளந்த *
மன்னன்சரிதைக்கே மாலாகிப்பொன்பயந்தேன் *
பொன்னங்கழிக்கானல் புள்ளினங்காள் புல்லாணி *
அன்னமாய்நூல்பயந்தாற்கு ஆங்கிதனைச் செப்புமினே.
1779 muṉṉam kuṟal̤ uru āy * mūvaṭi maṇ kŏṇṭu al̤anta *
maṉṉaṉ caritaikke * māl āki pŏṉ payanteṉ **
pŏṉṉam kazhik kāṉal * pul̤ iṉaṅkāl̤ pullāṇi *
aṉṉam āy nūl payantāṟku * āṅku itaṉaic cĕppumiṉe-2

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Saranagathi

Divya Desam

Simple Translation

1779. She says, “As a dwarf, he, the king, measured the whole world, and as a swan he taught the Vedās to the sages. I fell in love with him and my body became pale. O birds, you live in the golden-colored salt pans on the banks of the ocean. Go and tell the lord of Thiruppullāni of my love for him. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பொன்னம் கழி பொன்னங்கழி என்கிற; கானல் கடற் கரை நிலங்களிலுள்ள; புள் இனங்காள்! பறவை இனங்களே!; முன்னம் குறள் உருவாய் முன்பு வாமனனாக வந்து; மூவடி மண் கொண்டு மூவடி மண் பெற்று; அளந்த மூவுலகங்களையும் அளந்த; மன்னன் சரிதைக்கே பெருமானின் செயலுக்கே; மால் ஆகி நான் மயங்கி என்; பொன் பயந்தேன் பொன் நிறத்தை இழந்தேன்; இதனை இந்த என் நிலமையை; புல்லாணி ஆங்கு திருப்புல்லாணி சென்று; அன்னம் ஆய் நூல் ஹம்ஸரூபமாய் வேதங்களை; பயந்தாற்கு கொடுத்தவரான எம்பெருமானிடம்; செப்புமினே அறிவியுங்கள்