PT 9.3.8

மனமே! அன்பு காட்டிப் பிரிந்தவரிடம் வா

1775 அலமும்ஆழிப்படையும்உடையார் நமக்குஅன்பராய் *
சலமதாகித்தகவொன்றிலர் நாம்தொழுதும்எழு *
உலவுகால்நற்கழியோங்கு தண்பைம்பொழிலூடு * இசை
புலவுகானல் களிவண்டினம்பாடுபுல்லாணியே.
1775 alamum āzhip paṭaiyum uṭaiyār * namakku aṉpar āy *
calam-atu āki takavu ŏṉṟu ilar * nām tŏzhutum ĕzhu- **
ulavu kāl nal kazhi oṅku * taṇ paim pŏzhilūṭu * icai
pulavu kāṉal * kal̤i vaṇṭu iṉam pāṭu pullāṇiye-8

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1775. She says, “He with a conch and a discus loved me and left me, leaving me to suffer. He cheated me and I shouldn’t love him. He is the god of Thiruppullāni, filled with salt pans and streams of water where happy bees sing in the cool flourishing groves and their music spreads on the banks of the ocean that smell with fish. Come, let us go and worship him there. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அலமும் கலப்பையையும்; ஆழிப் படையும் சக்கரமும் உடைய; உடையார் நமக்கு பெருமான் நம் விஷயத்தில்; அன்பர் ஆய் அன்பு உடையவர் போல்; சலம் அது ஆகி கபட நாடகமாடி; தகவு சிறிதும் இரக்கமில்லாதவராக; ஒன்று இலர் இருக்கிறார்; உலவு கால் தென்றல் காற்றையுடைய; நல் கழி நல்ல உப்பங்கழிகளிலே; புலவு கானல் பிரிந்தார் இருக்குமிடமான; ஓங்கு தண் உயர்ந்து குளிர்ந்து பரந்த; பைம் பொழிலூடு கடற்கரை சோலைகளிலே; களி வண்டு இனம் களிவண்டுகளின் கூட்டமானது; இசை பாடு நாம் இசைபாடும் நாம்; புல்லாணியே திருபுல்லாணியைச் சென்று அடைந்து; தொழுதும் எழு தொழுவோம் எழுந்திரு