PT 9.3.7

மனமே? தூங்காமல் இருந்து என்ன பயன்? கிளம்பு

1774 பரவிநெஞ்சே! தொழுதும்எழு போய்அவன்பாலமாய் *
இரவும்நாளும் இனிக்கண்துயிலாதிருந்துஎன்பயன்? *
விரவிமுத்தம் நெடுவெண்மணல்மேற்கொண்டு * வெண்திரை
புரவியென்னப்புதம்செய்து வந்துந்துபுல்லாணியே.
1774 paravi nĕñce tŏzhutum ĕzhu- * poy avaṉ pālam āy *
iravum nāl̤um iṉi kaṇ tuyilātu * iruntu ĕṉ payaṉ? **
viravi muttam nĕṭu vĕṇ maṇal mel kŏṇṭu * vĕṇ tirai *
puravi ĕṉṉap putamcĕytu * vantu untu pullāṇiye-7

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1774. She says, “O pitiful heart, what is the use of staying here thinking of his love, unable to sleep night and day? He stays In Thiruppullāni where the white waves come jumping like horses, bringing pearls and leaving them on the abundant white sand. O heart, let us go and worship him. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெஞ்சே! மனமே!; போய் அவன் பிரிந்து போன; பாலம் ஆய் பரவி அவனை நினைத்து துதித்து; இனி இரவும் நாளும் இனி இரவும் பகலும்; கண் துயிலாது உறங்காதிருப்பதனால்; இருந்து என் பயன் என்ன பயன்; விரவி முத்தம் முத்துக்களோடு கலந்து; நெடு வெண் மணல் நிறைய வெண்மணல்களை; மேல் கொண்டு கொண்டு வந்து; வெண்திரை வெளுத்த அலைகள்; புரவி என்ன குதிரை போல; புதம் செய்து தாவி வந்து; வந்து உந்து தள்ளுமிடமான; புல்லாணியே திருபுல்லாணியைச் சென்று அடைந்து; தொழுதும் எழு தொழுவோம் எழுந்திரு