PT 9.3.2

மனமே! கல்யாண ஜகந்நாதனைத் தொழலாம்

1769 உருகிநெஞ்சே! நினைந்துஇங்குஇருந்தென்? தொழுதும்எழு *
முருகுவண்டுண்மலர்க்கைதையின் நீழலில்முன்னொருநாள் *
பெருகுகாதன்மை என்னுள்ளமெய்தப்பிரிந்தானிடம் *
பொருதுமுந்நீர்க்கரைக்கே மணியுந்துபுல்லாணியே.
1769 uruki nĕñce niṉaintu iṅku iruntu ĕṉ? * tŏzhutum ĕzhu- *
muruku vaṇṭu uṇ malark kaitaiyiṉ * nīzhalil muṉ ŏrunāl̤ **
pĕruku kātaṉmai ĕṉ ul̤l̤am * ĕytap pirintāṉ iṭam *
pŏrutu munnīrk karaikke * maṇi untu pullāṇiye-2

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1769. She says, “O heart! You melt with love. What is the use of staying here thinking of him? Once, one day, he loved me under the shadow of blooming thazhai plants where singing bees drink honey from the flowers, and left me there and since then my love for him has grown in my heart. He is the god of Thiruppullāni where the waves dash on the banks of the river and leave jewels. O heart, come let us go and worship him. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெஞ்சே! மனமே!; இங்கு இருந்து இங்கேயிருந்துகொண்டு; நினைந்து உருகி சிந்தித்து உருகுவதனால்; என் என்ன பயன்; முருகு வண்டு உண் வண்டுகள் தேனைப் பருகும்; மலர்க் கைதையின் தாழம்பூக்களின்; நீழலின் முன் ஒருநாள் நிழலிலே முன்பு ஒரு நாள்; என் உள்ளம் என் நெஞ்சில்; பெருகு காதன்மை எய்த காதல் வளர்த்தவன்; பிரிந்தான் பிரிந்து போன பெருமான்; இடம் இருக்குமிடம்; பொருது அலைகளோடு; முந்நீர் கரைக்கே கூடின கடற்கரையிலே; மணி உந்து ரத்னங்களைத் தள்ளிக்கொண்டு வரும்; புல்லாணியே திருபுல்லாணியைச் சென்று அடைந்து; தொழுதும் எழு தொழுவோம் எழுந்திரு