PT 9.3.10

இவற்றைப் பாடினால் வைகுந்தம் கிடைக்கும்

1777 இலங்குமுத்தும்பவளக்கொழுந்தும் எழில்தாமரை *
புலங்கள்முற்றும்பொழில்சூழ்ந்து அழகாயபுல்லாணிமேல் *
கலங்கலில்லாப்புகழான் கலியனொலிமாலை *
வலங்கொள்தொண்டர்க்குஇடமாவது பாடில் வைகுந்தமே. (2)
1777 ## ilaṅku muttum paval̤ak kŏzhuntum * ĕzhil tāmarai *
pulaṅkal̤ muṟṟum pŏzhil cūzhnta * azhaku āya pullāṇimel *
kalaṅkal illāp pukazhāṉ * kaliyaṉ ŏlimālai *
valamkŏl̤ tŏṇṭarkku iṭam āvatu- * pāṭu il vaikuntame-10

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1777. Kaliyan, the poet of faultless fame, composed a garland of pāsurams on beautiful Thiruppullāni surrounded with groves filled with lovely lotus flowers and flourishing with corals and shining pearls. If devotees learn and sing these pāsurams and circle the temple of the god, they will go to Vaikuntam.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இலங்கு முத்தும் ஒளியுள்ள முத்துக்களும்; பவளக் கொழுந்தும் பவளக் கொழுந்தும்; எழில் தாமரை அழகிய தாமரைகளுமுள்ள; புலங்கள் தடாகங்களையுடைய; பொழில் சோலைகளாலே; முற்றும் சூழ்ந்து எங்கும் சூழ்ந்த; அழகு ஆய அழகான; புல்லாணிமேல் திருப்புல்லாணியைக் குறித்து; கலங்கல் இல்லா கலக்கமில்லாத; புகழான் கீர்த்தியையுடையவரான; கலியன் திருமங்கையாழ்வார்; ஒலி மாலை அருளிச்செய்த சொல் மாலையான; வலம் கொள் இப்பாசுரங்களை அனுஸந்திக்கும்; தொண்டர்க்கு தொண்டர்களுக்கு; இடமாவது இடமாவது; பாடு இல் ஒரு துன்பமுமில்லாத; வைகுந்தமே ஸ்ரீவைகுந்தமே