PT 8.7.9

மலர்மகள் நிலமகள் மணாளனின் இடம் இது

1716 புலமனுமலர்மிசை மலர்மகள்புணரிய *
நிலமகளென இனமகளிர்களிவரொடும் *
வலமனுபடையுடை மணிவணர், நிதிகுவை *
கலமனுகணபுரம் அடிகள்தம்இடமே.
1716 pula maṉum malarmicai * malar-makal̤ puṇariya *
nilamakal̤ ĕṉa iṉa * makal̤irkal̤ ivarŏṭum **
vala maṉu paṭaiyuṭai * maṇi vaṇar-niti kuvai *
kala maṉu kaṇapuram- * aṭikal̤-tam iṭame-9

Ragam

Aparūpa / அபரூப

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1716. The lord who carries a discus in his right hand and stays with Lakshmi and with the earth goddess surrounded by their attendants stays in Thirukkannapuram where ships bring precious goods and jewels.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நிதி குவை நிதிக் குவியல்களைக் கொண்டு வரும்; கலமனு மரக்கலங்கள் நிறைந்த; கணபுரம் திருக்கண்ணபுரம்; புலமனு புலன்களைக் கவரும்; மலர் மிசை தாமரையிலிருக்கும்; மலர் மகள் திருமகளோடும்; புணரிய என்றும் தன்னோடு கூடின; நில மகள் பூமாதேவியோடும்; என இன என்று இப்படிப்பட்ட; மகளிர்கள் பெண்மையையுடைய; இவரொடும் இவர்களோடும்; வலமனு வலது கையில்; படை உடை சக்கரத்தை உடையவனும்; மணி நீலமணி போன்ற நிறமுடைய; வணர் வடிவழகை உடைய; அடிகள் தம் எம்பெருமானின்; இடமே இருப்பிடமாகும்