PT 8.7.5

அண்டமெல்லாம் அளந்தவர் உறைவிடம் இது

1712 தொண்டரும்அமரரும் முனிவரும்தொழுதெழ *
அண்டமொடுஅகலிடம் அளந்தவர்அமர்செய்து *
விண்டவர்பட மதிளிலங்கைமுன்எரியெழ *
கண்டவர்கணபுரம் அடிகள்தம்இடமே.
1712 tŏṇṭarum amararum * muṉivarum tŏzhutu ĕzha *
aṇṭamŏṭu akal-iṭam * al̤antavar amarcĕytu **
viṇṭavar paṭa * matil̤ ilaṅkai muṉ ĕri ĕzha *
kaṇṭavar kaṇapuram- * aṭikal̤-tam iṭame-5

Ragam

Aparūpa / அபரூப

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1712. Our lord who fought with the Rākshasas, killing them and burning Lankā surrounded with forts, and measured the earth and the sky in the sacrifice of Mahābali, as his devotees, gods and sages saw and worshiped him - stays in Thirukkannapuram.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கணபுரம் திருக்கண்ணபுரம்; தொண்டரும் தொண்டர்களும்; அமரரும் பிரமன் முதலிய தேவர்களும்; முனிவரும் ஸனகாதி முனிவர்களும்; தொழுது எழ தொழுது எழ; அண்டமோடு அகல் இடம் ஆகாசமும் பூமியும்; அளந்தவர் அனைத்தையும் அளந்து கொண்டவரும்; விண்டவர் பட சத்துருக்கள் அழிந்து போம்படி; அமர் செய்து போர் புரிந்தவரும்; மதிள் இலங்கை மதிளையுடைய இலங்கை; முன் எரி எழ முன்பு தீப்பற்றி எரியும்படி; கண்டவர் பண்ணினவருமான; அடிகள் தம் எம்பெருமானின்; இடமே இருப்பிடமாகும்