PT 8.7.4

மலர்மகள் மணாளன் மன்னும் இடம் இது

1711 ஏதலர்நகைசெய இளையவரளைவெணெய் *
போதுசெய்தமரிய புனிதர், நல்விரைமலர் *
கோதியமதுகரம் குலவியமலர்மகள் *
காதல்செய்கணபுரம் அடிகள்தம்இடமே.
1711 ## etalar nakaicĕya * il̤aiyavar al̤ai vĕṇĕy *
potu cĕytu amariya * puṉitar-nal virai ** malar
kotiya matukaram * kulaviya malar-makal̤ *
kātalcĕy kaṇapuram- * aṭikal̤-tam iṭame-4

Ragam

Aparūpa / அபரூப

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1711. When Kannan stole the churned butter that was kept by the young cowherd girls they saw him and laughed at him. He, the lord, embraces his beloved Lakshmi, and stays in Thirukkannapuram where abundant fragrant flowers blossom as bees play in their pollen.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நல் விரை மலர் மணம் மிக்க மலரிலிருந்து; கோதிய மதுவை உண்ணும்; மதுகரம் வண்டுகளால்; குலவிய சூழ்ந்த; மலர் மகள் தாமரை மலரை தரித்த திருமகள்; காதல் செய் விரும்பும்; கணபுரம் திருக்கண்ணபுரமானது; அடிகள் தம் எம்பெருமானின்; இடமே இருப்பிடமாகும்; ஏதலர் வேண்டாதவர்கள் சிசுபாலாதிகள்; நகை செய சிரிக்கும்படியாக; இளையவர் பெண்கள் கடைந்து வைத்த; அளை வெணெய் ஆய்ச்சியர் வெண்ணெயை; போது செய்து உண்டு; அமரிய மகிழ்ந்த; புனிதர் அடிகள் புனிதரான பெருமான்; தம் இடமே இருக்கும் இடம்