PT 8.7.10

துயரம் நீங்குவர்

1717 மலிபுகழ்கணபுரமுடைய எம்அடிகளை *
வலிகெழுமதிளயல் வயலணிமங்கையர் *
கலியனதமிழிவை விழுமியவிசையினொடு *
ஒலிசொலும்அடியவர் உறுதுயரிலரே. (2)
1717 ## mali pukazh kaṇapuram uṭaiya * ĕm aṭikal̤ai *
vali kĕzhu matil̤ ayal * vayal aṇi maṅkaiyar **
kaliyaṉa tamizh ivai * vizhumiya icaiyiṉŏṭu *
ŏli cŏlum aṭiyavar * uṟu tuyar ilare-10

Ragam

Aparūpa / அபரூப

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1717. Kaliyan, the chief of Thirumangai filled with flourishing fields and forts composed ten Tamil pāsurams on the famous god of Thirukkannapuram where people sing his praise. If devotees recite and learn these pāsurams they will have no trouble in their lives.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வலி கெழு திண்மையான; மதிள் மதிள்களையுடைய; அயல் சுற்றுப்புறங்களிலிருக்கும்; வயல் வயல்களால்; அணி அழகிய; மங்கையர் திருமங்கை மன்னனான; கலியன திருமங்கை ஆழ்வாரின்; மலி புகழ் நிறைந்த புகழையுடைய; கணபுரம் திருக்கண்ணபுரத்தை; உடைய இருப்பிடமாக உடைய; எம் அடிகளை எம்பெருமானைக் குறித்து; தமிழ் இவை இந்த தமிழ்ப் பாசுரங்களை; விழுமிய இசையினொடு சிறந்த இசையோடு; ஒலி சொலும் ஓதுபவர்களான; அடியவர் அடியவர்களுக்கு; உறு துயர் இலரே எந்த வித பாபமும் சேராது