Chapter 7

Thirukkannapuram 7 - (வியம் உடை)

திருக்கண்ணபுரம் 7
Thirukkannapuram 7 - (வியம் உடை)
The āzhvār proclaims that Thirukannapuram is the abode of Lord Vishnu, who took the ten Avatars for the salvation of the world. He urges all of us to surrender to Sowriraja Perumal at Thirukannapuram for our salvation.
உலக மக்கள் உய்யுமாறு தசாவதாரங்களை எடுத்த திருமாலின் இருப்பிடம் திருக்கண்ணபுரம் என்று கூறி, நம்மை யெல்லாம் சவுரிராஜப் பெருமாளிடம் செலுத்துகிறார் ஆழ்வார்.
Verses: 1708 to 1717
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Recital benefits: Getting freed from all hurdles
  • PT 8.7.1
    1708 ## வியம் உடை விடை இனம் * உடைதர மட மகள் *
    குயம் மிடை தட வரை * அகலம் அது உடையவர் **
    நயம் உடை நடை அனம் * இளையவர் நடை பயில் *
    கயம் மிடை கணபுரம் * அடிகள் தம் இடமே 1
  • PT 8.7.2
    1709 இணை மலி மருதினொடு * எருதிற இகல் செய்து *
    துணை மலி முலையவள் * மணம் மிகு கலவியுள் **
    மணம் மலி விழவினொடு * அடியவர் அளவிய *
    கணம் மலி கணபுரம் * அடிகள் தம் இடமே 2
  • PT 8.7.3
    1710 புயல் உறு வரை மழை * பொழிதர மணி நிரை *
    மயல் உற வரை குடை * எடுவிய நெடியவர் **
    முயல் துளர் மிளை முயல் துள * வள விளை வயல் *
    கயல் துளு கணபுரம் * அடிகள் தம் இடமே 3
  • PT 8.7.4
    1711 ## ஏதலர் நகைசெய * இளையவர் அளை வெணெய் *
    போது செய்து அமரிய * புனிதர் நல் விரை ** மலர்
    கோதிய மதுகரம் * குலவிய மலர் மகள் *
    காதல்செய் கணபுரம் * அடிகள் தம் இடமே 4
  • PT 8.7.5
    1712 தொண்டரும் அமரரும் * முனிவரும் தொழுது எழ *
    அண்டமொடு அகல் இடம் * அளந்தவர் அமர்செய்து **
    விண்டவர் பட * மதிள் இலங்கை முன் எரி எழ *
    கண்டவர் கணபுரம் * அடிகள் தம் இடமே 5
  • PT 8.7.6
    1713 மழுவு இயல் படை * உடையவன் இடம் மழை முகில் *
    தழுவிய உருவினர் * திருமகள் மருவிய **
    கொழுவிய செழு மலர் * முழுசிய பறவை பண் *
    எழுவிய கணபுரம் * அடிகள் தம் இடமே 6
  • PT 8.7.7
    1714 பரிதியொடு அணி மதி * பனி வரை திசை நிலம் *
    எரி தியொடு என இன * இயல்வினர் செலவினர் **
    சுருதியொடு அரு மறை * முறை சொலும் அடியவர் *
    கருதிய கணபுரம் * அடிகள் தம் இடமே 7
  • PT 8.7.8
    1715 படி புல்கும் அடி இணை * பலர் தொழ மலர் வைகு *
    கொடி புல்கு தட வரை * அகலம் அது உடையவர் **
    முடி புல்கு நெடு வயல் * படை செல அடி மலர் *
    கடி புல்கு கணபுரம் * அடிகள் தம் இடமே 8
  • PT 8.7.9
    1716 புல மனும் மலர்மிசை * மலர் மகள் புணரிய *
    நிலமகள் என இன * மகளிர்கள் இவரொடும் **
    வல மனு படையுடை * மணி வணர் நிதி குவை *
    கல மனு கணபுரம் * அடிகள் தம் இடமே 9
  • PT 8.7.10
    1717 ## மலி புகழ் கணபுரம் உடைய * எம் அடிகளை *
    வலி கெழு மதிள் அயல் * வயல் அணி மங்கையர் **
    கலியன தமிழ் இவை * விழுமிய இசையினொடு *
    ஒலி சொலும் அடியவர் * உறு துயர் இலரே 10