PT 8.6.7

விபீடணனுக்கு அருளியவனைத் தொழுவோம்

1704 இலையார்மலர்ப்பூம்பொய்கைவாய் முதலைதன்னால்அடர்ப்புண்டு *
கொலையார்வேழம்நடுக்குற்றுக்குலைய அதனுக்குஅருள்புரிந்தான் *
அலைநீரிலங்கைத்தசக்கிரீவற்கு இளையோற்குஅரசையருளி * முன்
கலைமாச்சிலையால்எய்தானூர் கண்ணபுரம்நாம்தொழுதுமே.
1704 ilai ār malarp pūm pŏykaivāy * mutalai-taṉṉāl aṭarppuṇṭu *
kŏlai ār vezham naṭukku uṟṟuk kulaiya * ataṉukku arul̤purintāṉ **
alai nīr ilaṅkait tacakkirīvaṟku * il̤aiyoṟku aracai arul̤i * muṉ
kalai māc cilaiyāl ĕytāṉ ūr * kaṇṇapuram nām tŏzhutume-7

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1704. He killed the murderous crocodile that caught the elephant Gajendra when the elephant went to get flowers from a pond blooming with flowers and tender leaves to worship him, and he gave the kingdom of Lankā to Vibhishanā the younger brother of ten-headed Rāvana, the king of Lankā surrounded with oceans rolling with waves, after shooting his arrow and killing Marisan when he came as a golden deer. He stays in Thirukkannapuram— let us go there and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொலை ஆர் வேழம் மதம் மிகுந்த யானை; இலை ஆர் இலைகள் நிறைந்த; மலர்ப் பூம் மலர்களையுடைய அழகிய; பொய்கை வாய் பொய்கையில்; முதலை தன்னால் முதலையினால்; அடர்ப்புண்டு துன்பப்பட்டு; நடுக்கு உற்று நடுங்கி ஓய்ந்து; குலைய நிற்க; அதனுக்கு அருள் அதனுக்கு அருள்; புரிந்தான் புரிந்தவனும்; அலை அலைகளை உடைய; நீர் கடல் சூழ்ந்த இலங்கைக்கு; இலங்கை தலைவனான; தசக்கிரீவற்கு ராவணனின்; இளையோற்கு தம்பியான விபீஷணனுக்கு; அரசை அருளி அரசை அளித்தவனும்; முன் முன்பு; கலை மா மாரீசனாகிற மானை; சிலையால் ஒரு வில்லாலே; எய்தான் ஊர் முடித்தவனின் ஊரான; கண்ணபுரம் திருக்கண்ணபுரத்தை; நாம் தொழுதுமே நாம் தொழுவோம்