PT 8.6.5

மன்மதனின் தந்தையை நாம் தொழுவோம்

1702 ஆமையாகிஅரியாகி அன்னமாகி * அந்தணர்தம்

ஓமமாகிஊழியாகி உலகுசூழ்ந்தநெடும்புணரி *

சேமமதிள்சூழிலங்கைக்கோன் சிரமுங்கரமும்துணித்து * முன்

காமற்பயந்தான்கருதுமூர் கண்ணபுரம்நாம்தொழுதுமே.
1702 āmai āki ari āki * aṉṉam āki * antaṇar-tam

omam āki ūzhi āki * uvari cūzhnta nĕṭum puṇari **

cema matil̤ cūzh ilaṅkaik koṉ * ciramum karamum tuṇittu * muṉ

kāmaṉ payantāṉ karutum ūr * kaṇṇapuram nām tŏzhutume-5

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1702. Our lord, the father of Kāma, is the eon itself. He took the forms of a turtle, a man-lion and a swan to fight with the Asurans and he accepts the sacrifices that Vediyars offer with the recitation of the Vedās. He went to Lankā protected by strong forts and surrounded with high, wave-filled oceans that circle the whole earth and cut off the ten heads and twenty hands of its king Rāvana and he stays happily in Thirukkannapuram—let us go there and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆமை ஆகி கூர்மமாய்; அரி ஆகி நரசிம்மமாய்; அன்னம் ஆகி அன்னமாய்; அந்தணர் தம் அந்தணர்களின்; ஓமம் ஆகி யாகமாய்; ஊழி ஆகி காலனாய்; உவரி நெடும் விசாலமான உப்பு; புணரி சூழ்ந்த கடலாலே சூழ்ந்த; சேம மதிள் காவலான மதிள்களாலே; சூழ் சூழ்ந்த; இலங்கைக்கோன் ராவணனின்; சிரமும் கரமும் சிரமும் கரமும்; துணித்து துணித்தவனும்; முன் காமன் முன்பு மன்மதனை; பயந்தான் மகனாகப் பெற்றவனும்; கருதும் ஊர் விரும்பி இருக்கும் ஊரான; கண்ணபுரம் திருக்கண்ணபுரத்தை; நாம் தொழுதுமே நாம் தொழுவோம்