PT 8.6.3

இராவணனை வதைத்தவனை நாம் தொழுவோம்

1700 வல்லியிடையாள்பொருட்டாக மதிள்நீரிலங்கையார்கோவை *
அல்லல்செய்துவெஞ்சமத்துள் ஆற்றல்மிகுந்தஆற்றலான் *
வல்லாளரக்கர்குலப்பாவைவாட முனிதன்வேள்வியை *
கல்விச்சிலையால்காத்தானூர் கண்ணபுரம்நாம்தொழுதுமே.
1700 valli iṭaiyāl̤ pŏruṭṭāka * matil̤ nīr ilaṅkaiyār-kovai *
allal cĕytu vĕm camattul̤ * āṟṟal mikutta āṟṟalāṉ **
val āl̤ arakkar kulappāvai vāṭa * muṉi-taṉ vel̤viyai *
kalvic cilaiyāl kāttāṉ ūr * kaṇṇapuram nām tŏzhutume-3

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1700. Our lord who fought with Thādaga, the daughter of a Rākshasa family and killed her when she disturbed the sacrifices of the sages, and protected their sacrifices, and who went to Lankā surrounded by forts and the ocean, fought a terrible war with the king of Lankā, afflicting him, and brought back his vine-waisted wife Sita stays in Thirukkannapuram. Let us go there and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வல்லி கொடிபோன்ற; இடையாள் இடையையுடைய; பொருட்டாக ஸீதைக்காக; நீர் கடலை அகழாகவுடைய; மதிள் மதிள்களோடு கூடின; இலங்கையார் இலங்கை அரக்கர்களின்; கோவை தலைவனை; அல்லல் செய்து துன்பப்படுத்தி; வெம் சமத்துள் கொடிய போரில்; ஆற்றல் மிகுந்த வலிமை மிகுந்த; ஆற்றலான் மகா வீரனாய்; வல்லாள் வலிய ஆண்மையையுடைய; அரக்கர் அரக்கர்களின்; குல குலத்தில் தோன்றிய; பாவை வாட தாடகையை அழித்து; முனி தன் விச்வாமித்ர முனியின்; வேள்வியை வேள்வியை; கல்வி தான் கற்ற; சிலையால் வில்லைக் கொண்டு; காத்தான் ஊர் காத்த பெருமானின் ஊரான; கண்ணபுரம் திருகண்ணபுரத்தை; நாம் தொழுதுமே நாம் தொழுவோம்