PT 8.3.6

என் ஒளிவளைகளை இழந்தேன்

1673 மடலெடுத்தநெடுந்தாழை மருங்கெல்லாம்வளர்பவளம் *
திடலெடுத்துச்சுடரிமைக்கும் திருக்கண்ணபுரத்துறையும் *
அடலடர்த்தன்றிரணியனை முரணழிய, அணியுகிரால் *
உடலெடுத்தபெருமானுக்கு இழந்தேன்என்னொளிவளையே.
1673 maṭal ĕṭutta nĕṭun tāzhai * maruṅku ĕllām val̤ar paval̤am *
tiṭal ĕṭuttu cuṭar imaikkum * tirukkaṇṇapurattu uṟaiyum **
aṭal aṭarttu aṉṟu iraṇiyaṉai * muraṇ azhiya aṇi ukirāl *
uṭal ĕṭutta pĕrumāṉukku * izhanteṉ-ĕṉ ŏl̤i val̤aiye-6

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1673. She says, “My shining bangles grow loose and fall from my arms, because I love the dear lord who fought with Hiranyan, split open his chest with his strong nails and destroyed his strength. He stays in Thirukkannapuram where tall fragrant petaled thāzai flowers grow on the dunes and the corals left by the river shine like blinking eyes. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மடல் எடுத்த மடல்களையுடைய; நெடுந் தாழை தாழம்பூ செடிகளின்; மருங்கு எல்லாம் பக்கங்களில் எல்லாம்; வளர் பவளம் வளரும் பவளங்கள்; திடல் எடுத்து மேடுகளிலே படர்ந்து; சுடர் இமைக்கும் ஒளியுடன் பிரகாசிக்கும்; திருக்கண்ணபுரத்து திருக்கண்ணபுரத்தில்; உறையும் இருக்கும் பெருமான்; அடல் அன்று அன்று போரில்; இரணியனை இரணியனை; அடர்த்து நெருக்கி; முரண் அழிய மிடுக்கு அழியும் படியாக அடக்கி; அணிஉகிரால் அழகிய நகங்களால்; உடல் எடுத்த அவன் உடலைப் பிளந்த; பெருமானுக்கு பெருமானுக்கு; என் ஒளி எனது அழகிய ஒளிமயமான; வளையே வளையல்களை; இழந்தேன் இழந்தேன்